சென்னை | கத்தியை காட்டி மிரட்டி பெண்ணிடம் வழிப்பறியில் ஈடுபட்டவர் கைது

By செய்திப்பிரிவு

சென்னை: திருவொற்றியூரில் கத்தி முனையில் தனியார் நிறுவன பெண் ஊழியரிடம் வழிப்பறியில் ஈடுபட்டவரை போலீஸார் கைது செய்துள்ளனர். சென்னை திருவொற்றியூர் அப்பர் நகர் பகுதியைச் சேர்ந்த வர் பூங்கொடி (50). தனியார் நிறுவனம் ஒன்றில் பணி செய்து வருகிறார். இவர், நேற்று முன்தினம் காலை பணிக்கு செல்வதற்காக வீட்டின் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.

பணம் பறிப்பு: அப்போது, அங்கு வந்த ஒருவர் பூங்கொடியை வழி மறித்து, கத்தியைக் காட்டி மிரட்டி அவரிடம் இருந்த பணத்தை பறித்துக் கொண்டு தப்பிவிட்டார். இதுபற்றி, திருவொற்றியூர் காவல் நிலையத்தில் பூங்கொடி புகார் அளித்தார். போலீஸார் வழக்குப் பதிந்துவிசாரித்தனர். சம்பவம் நடைபெற்ற இடம் மற்றும் அதைச்சுற்றி பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சி களை போலீஸார் ஆய்வு செய்தனர்.

சரித்திர பதிவேடு குற்றவாளி: அதனடிப்படையில், பூங் கொடியிடம் வழிப்பறியில் ஈடுபட்டதாக திருவொற்றி யூரைச் சேர்ந்த முனுசாமி (32) என்பவைரை கைது செய்தனர். அவர், முத்தியால்பேட்டை காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி என்பதும், அவர் மீது ஏற்கெனவே 2 கொலை, 1 கொலை முயற்சி, 3 கஞ்சா வழக்குகள் உட்பட 9 குற்ற வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை நீதிமன்றத்தில் போலீஸார் ஆஜர் படுத்தி, சிறையில் அடைத்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE