தூத்துக்குடி: தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை குறித்து அவதூறாக வீடியோ வெளியிட்டதாக ஒருவரை போலீஸார் நேற்று கைது செய்தனர்.
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வார்டு ஒன்றில் 10 வயது சிறுவன், கத்திரி, கத்தி, இடுக்கி போன்ற மருத்துவ உபகரணங்களை சுத்தம் செய்யும் வீடியோ காட்சி நேற்று முன்தினம் பல்வேறு வாட்ஸ்அப் குழுக்களில் வேகமாக பரவியது. இது தொடர்பாக விசாரித்த போது சிறுவனின் தந்தைக்கு காலில் காயத்துக்கு மருந்து போட்டு கட்டுவதற்காக பயன்படுத்தப்பட்ட கத்திரி, கத்தி, இடுக்கி போன்ற மருத்துவ உபகரணங்களை அச்சிறுவன் சுத்தம் செய்தது தெரியவந்தது.
தனதுதந்தை கூறியதன் பேரிலேயே சிறுவன் அந்த உபகரணங்களை கழுவியதாக டீன் சிவக்குமார் விளக்கம் அளித்திருந்தார். மேலும் இது தொடர்பாக டீன் சிவக்குமார் தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அதில், அரசு மருத்துவமனை மீது அவதூறு பரப்பும் வகையில் சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
அதன்பேரில் தென்பாகம் போலீஸார் 504, 505 (1) (பி), சிறார் நீதிச்சட்டம் 2015 பிரிவு 75 ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் புதுக்கோட்டை பகுதியை சேர்ந்த அந்தோனி இன்பராஜ் (45) என்பவர் சமூக வலைதளங்களில் வீடியோ பதிவிட்டது தெரிய வந்துள்ளது. இதையடுத்து அவரை தென்பாகம் போலீஸார் நேற்று கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
39 mins ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
9 days ago
க்ரைம்
10 days ago
க்ரைம்
10 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
12 days ago
க்ரைம்
12 days ago
க்ரைம்
13 days ago