திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூரை அடுத்த பிஞ்சிவாக்கம் கிராமம், அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் ரஞ்சித் குமார் (22). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார்.
ரஞ்சித் குமார் அதே பகுதியைச் சேர்ந்த பிரியதர்ஷினி (18) என்பவரை காதலித்து திருமணம் செய்தார். கடந்த 15 நாட்களுக்கு முன்பு தான் இவர்களுக்கு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், பிரியதர்ஷினி குளிப்பதற்காக நேற்று முன்தினம் வீட்டில் உள்ள குளியலறைக்குச் சென்று அங்கிருந்த ஹீட்டரை ஆன் செய்தார்.
அப்போது, ஏற்பட்ட மின்கசிவு காரணமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் மயங்கி விழுந்தார். இதைக் கண்ட வீட்டில் இருந்தவர்கள் உடனடியாக பிரியதர்ஷினியை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு போய் சேர்த்தனர்.
மருத்துவமனையில் பரிசோதனை செய்த மருத்துவர்கள் பிரியதர்ஷினி உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். கடம்பத்தூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
9 hours ago
க்ரைம்
10 hours ago
க்ரைம்
14 hours ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
7 days ago
க்ரைம்
8 days ago
க்ரைம்
9 days ago
க்ரைம்
9 days ago
க்ரைம்
12 days ago
க்ரைம்
13 days ago
க்ரைம்
13 days ago