புதுச்சேரி ஜிப்மரில் கஞ்சா விற்பனை: 3 மருத்துவ மாணவர்கள் கைது

By செய்திப்பிரிவு

புதுச்சேரி: புதுச்சேரி ஜிப்மரில் கஞ்சா விற்ற தாக மருத்துவ மாணவர்கள் 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவ மனை வளாகத்தில் மருத்துவ மாணவர்களுக்கு கஞ்சா விற்கப் படுவதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து தன்வந்திரி நகர் காவல் ஆய்வாளர் பாலமுருகன் தலைமையிலான போலீஸார் திலாசுப்பேட்டை வீமன் நகர் நடு வீதியில் உள்ள வீட்டில் திடீரென சோதனையிட்டனர்.

அந்த வீட்டில் இருந்த மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த பூரன் பிமால் (35) என்பவரை பிடித்து 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

விசாரணையில், ஜிப்மரில் மருத்துவக்கல்வி பயிலும் பூரன் பிமால் தேர்வில் தோல்வி அடைந்ததால், பல ஆண்டுகளாக மீண்டும் மீண்டும் பருவத் தேர்வை எழுதி வருவதும், வருமானத்துக்காக மத்திய பிரதேசத்தில் இருந்து கஞ்சா வாங்கி வந்து ஜிப்மரில் படிக்கும் மருத்துவ மாணவர்களுக்கு விற் பனை செய்வதும் தெரிய வந்தது.

இதையடுத்து அவர் கூறிய தகவலின் பேரில் ஜிப்மர் மருத்து வமனை விடுதியில் தங்கியிருந்த 5-ம் ஆண்டு மாணவரான புது டெல்லியைச் சேர்ந்த தியான்சு (23), ஹரியாணாவைச் சேர்ந்த பயிற்சி மருத்துவர் அக்ஷிக்குமார் (26) ஆகியோரையும் போலீஸார் கைது செய்தனர்.

கைதான மூவரிடமிருந்தும் 3.2 கிலோ கஞ்சா, 4 மொபைல் போன்கள், ரூ.12,000 ரொக்கத்தை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

பின்னர் மூவரும் புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு காலாப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE