தாம்பரம் | கேரளாவை சேர்ந்த நர்சிங் மாணவி கொலை

By செய்திப்பிரிவு

தாம்பரம்: கேரள மாநிலத்தைச் சேர்ந்த பக்ருதீன் என்பவரின் மகள் பவுசியா (20). இவர், குரோம்பேட்டை பகுதியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் பிஎஸ்சி நர்சிங் 2-ம் ஆண்டு படித்து வந்துள்ளார். இவர், கேரளாவை சேர்ந்த தாஜுதீன் என்பவரின் மகன் ஆசிக்(20). என்பவருடன் கடந்த 5 ஆண்டுகளாகப் பழகி வந்ததாகக் கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் தனியார் விடுதியில் தங்கியிருந்ததாகத் தெரிகிறது. இந்நிலையில் மாணவி பவுசியா மர்மமான முறையில் அறையில் இறந்து கிடப்பதாக குரோம்பேட்டை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீஸார் மாணவியின் உடலை மீட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

உடன் தங்கியிருந்த இளைஞரின் செல்போன் எண்ணை வைத்து அவர் இருக்குமிடத்தை கண்காணித்து, பல்லாவரம் ரயில் நிலையத்தில் அவரை மடக்கிப் பிடித்தனர். பின்னர், அவரிடம் போலீஸார் மேற்கொண்ட விசாரணையில் அறையில் தங்கியிருந்தபோது இருவருக்குமிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தால், ஆத்திரமடைந்த ஆசிக் பவுசியாவின் கழுத்தை நெறித்து கொலை செய்ததாகவும்‌. யாருக்கும் தெரியாமல் கேரளா தப்பிச் செல்ல இருந்ததாகவும் கூறியுள்ளதாக போலீஸார் கூறினர். இதையடுத்து அவரை கைது செய்த போலீஸார் சிறையில் அடைத்தனர். தொடர்ந்து விசாரிக்கின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

22 hours ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

6 days ago

க்ரைம்

9 days ago

க்ரைம்

9 days ago

க்ரைம்

10 days ago

க்ரைம்

11 days ago

க்ரைம்

11 days ago

க்ரைம்

11 days ago

க்ரைம்

12 days ago

க்ரைம்

12 days ago

மேலும்