திருப்பத்தூர்: திருப்பத்தூரில் வீட்டில் தனியாக இருந்த கல்லூரி மாணவி உட்பட 2 பேரை கத்தியால் குத்திய சிறுவனிடம், காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அடுத்த பரதேசிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மனோகரன் (52). இவரது மனைவி கோகிலா (47). இவர்களது மகள் மோனிஷா (18). மனோகரன் அதே பகுதியில் தேநீர் கடை நடத்தி வருகிறார். மோனிஷா ஊத்தங்கரை பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் இளங்கலை 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில், மோனிஷா வீட்டில் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு கைபேசி ஒன்று திருடு போனதாக கூறப்படுகிறது.
இந்த திருட்டில் அதே பகுதியைச் சேர்ந்த 9-ம் வகுப்பு படிக்கும் 14 வயதுள்ள சிறுவன் தான் செய்துள்ளார் என மோனிஷா தனது பெற்றோரிடம் கூறினார். இதைத் தொடர்ந்து, அந்த சிறுவனை, மனோகரன் அழைத்து ஏன்? கைபேசியை திருடினாய் எனக் கேட்டும், அவரது பெற்றோரிடம் எச்சரித்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் மனோகரன்-கோகிலா ஆகியோர் தேநீர் கடைக்கு வியாபாரம் பார்க்கச்சென்றார். மாலை கல்லூரி முடிந்து மோனிஷா வீட்டுக்கு வந்தார். வீட்டில் தனியாக இருந்த மோனிஷா திடீரென அலறி கூச்சலிட்டார். இதைக்கேட்டதும் அருகேயிருந்த அவரது பாட்டி பாப்பாத்தி ஓடி வந்தார்.
அப்போது, கைபேசி திருடியதாக குற்றஞ்சாட்டப்பட்ட 9-ம் வகுப்பு மாணவர் கையில் கத்தியுடன் வெளியே ஓடி வந்தார். அவரை பாட்டி பாப்பாத்தி பிடிக்க முயன்ற போது அவரையும் கத்தியால் குத்திவிட்டு சிறுவன் அங்கிருந்து தப்பியோடினார். மோனிஷா மற்றும் பாப்பாத்தி யின் அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தபோது 2 பேரும் மயங்கி கிடந்தனர். அவர்களை மீட்ட பொது மக்கள், திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், மோனிஷா மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவ மனைக்கு மாற்றப்பட்டார்.
இதுகுறித்து தகவலறிந்த கந்திலி காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். இதையடுத்து, தப்பியோடிய சிறுவனை கந்திலி காவல் துறையினர் 3 மணி நேரத்தில் பிடித்து வந்து விசாரணை நடத்தியபோது, ‘‘கைபேசியை திருடியதாக தனது மீது வீண் பழி சுமத்தியதால் தனது குடும்பத்தார் முன்னிலையில் தான் அவமானப்பட்டதாகவும், அதற்கு பழி தீர்க்கவே வீட்டில் தனியாக இருந்த மோனிஷாவை கொலை செய்ய கத்தியால் குத்தினேன்’’ என வாக்குமூலம் அளித் துள்ளதாக தெரிவித்தனர். இதுதொடர்பாக சிறுவனிடம் தொடர்ந்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
22 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
7 days ago
க்ரைம்
7 days ago
க்ரைம்
8 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
12 days ago
க்ரைம்
13 days ago
க்ரைம்
13 days ago
க்ரைம்
13 days ago