ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் நடந்த ரூ.300 கோடி நிதி நிறுவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட ஆசிரியர்கள் 2 பேரை காவலில் எடுத்து பொருளாதார குற்றப் பிரிவு போலீஸார் விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.
சென்னையைச் சேர்ந்த நீதிமணி, இவரது மனைவி மேனகா, ராமநாதபுரத்தைச் சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர் ஆனந்த் ஆகியோர், புல்லியன் பின்டெக் என்ற நிதி நிறுவனம் நடத்தினர். இந்நிறுவனத்தில் முதலீடு செய்தால் 9 சதவீத வட்டி மற்றும் 2 ஆண்டுகளில் பணம் இரட்டிப்பாக வழங்கப்படும் எனக் கூறி ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, சேலம் உள்ளிட்ட பகுதிகளில் முதலீட்டாளர்களை ஈர்த்தனர். நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள் கோடிக்கணக்கான ரூபாயை முதலீடு செய்தனர்.
இந்நிலையில் 2020 மார்ச் முதல் முதலீட்டாளர்களுக்கு பணம் வழங்கவில்லை. அதனையடுத்து ராமநாதபுரம் மூலக் கொத்தளத்தைச் சேர்ந்த துளசி மணிகண்டன், காரைக்குடியைச் சேர்ந்த ஆசிரியை கற்பகவல்லி உள்ளிட்டோர் புகார் அளித்தனர். நீதிமணி, ஆனந்த், மேனகா ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸார், நீதிமணி, ஆனந்த் ஆகியோரை கைது செய்தனர்.
தற்போது இருவரும் ஜாமீனில் வெளியே உள்ளனர். இந்நிலையில், நிறுவனத்தின் தலைமை முகவர்களாக செயல்பட்டு கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்ததாக கும்பரம் அரசு உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் எம்.ஆரோக்கிய ராஜ்குமார் (45), ராமநாதபுரம் .வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர் சி.முருகவேல் (42) ஆகியோரை கடந்த 17-ம் தேதி போலீஸார் கைது செய்தனர்.
» இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.5 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்
» கோவை நகைக்கடையில் 200 பவுன் திருட்டு: தனிப்படையினர் கேரளாவில் முகாம்
மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த இருவரையும் தொழில் முதலீட்டாளர்கள் பாது காப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது பொருளாதார குற்றப் பிரிவு போலீஸார், 2 பேரையும் காவலில் எடுத்து விசாரணை நடத்த நீதிமன்றத்தில் அனுமதி கேட்டனர். அதன் அடிப்படையில் இரு வரையும் 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி அனுமதி வழங்கினார்.
இதைத் தொடர்ந்து ராமநாதபுரம் பொருளாதார குற்றப்பிரிவு டிஎஸ்பி குமரேசன் தலைமையிலான போலீஸார், 2 பேரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை முடிந்து இன்று (நவ. 30) மாலை மதுரை நீதிமன்றத்தில் இருவரையும் ஆஜர்படுத்த உள்ளனர்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
6 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
9 days ago
க்ரைம்
10 days ago
க்ரைம்
10 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
12 days ago
க்ரைம்
12 days ago
க்ரைம்
13 days ago