மதுரை: ‘நியோ மேக்ஸ்‘ மோசடி வழக்கில் முக்கிய நிர்வாகிகளான திருச்சி வீரசக்தி (48), மதுரை பால சுப்பிரமணியன் (55), இவரது மகளான லாவண்யா ஆகியோரை மதுரை பொருளாதாரக் குற்றத் தடுப்பு தனிப்படை கைது செய்தது.
மதுரையை தலைமையிடமாகக் கொண்ட ‘நியோ - மேக்ஸ்’ ரியல் எஸ்டேட் நிறுவனம் கூடுதல் வட்டி, டெபாசிட்டுக்கு இரட்டிப்புத் தொகை வழங்குவதாக ஏராளமானோரிடம் பல கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்த்தது. இந்நிலையில், முதலீட்டாளர் களிடம் வசூலித்த பல கோடி ரூபாயை முறைகேடு செய்ததாகப் புகார்கள் எழுந்தன.
பாதிக்கப் பட்டோர் அளித்த புகார்களின் பேரில், மதுரை பொருளாதாரக் குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸார், இந்நிறுவனத்தின் முக்கிய நிர்வாகிகள் உட்பட சுமார் 90-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப் பதிவு செய்தனர். இவ்வழக்கை, மதுரை பொரு ளாதாரக் குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸார் விசாரித்து இந்நிறுவனத்தின் முக்கிய நிர்வாகியான கமலக் கண்ணன் உட்பட 15-க்கும் மேற்பட்டோரை இதுவரை கைது செய்துள்ளனர்.
மேலும் பாலசுப்பிரமணியன், திருச்சி வீரசக்தி ஆகியோர் தீவிரமாக தேடப்பட்டு வந்தனர். இதனிடையே மதுரை மாட்டுத் தாவணி பகுதிக்கு வீரசக்தி, பாலசுப்பிரமணியன் ஆகியோர் வந்திருப்பது தெரிய வந்தது. உடனே டிஎஸ்பி மணிஷா தலைமையில் சார்பு - ஆய்வாளர்களான சிவ சுப்பிரமணியன், கணேஷ் பாபு, ராம கிருஷ்ணன், சரத் குமார் அடங்கிய தனிப் படையினர் நேற்று காலை அவர்களை சுற்றி வளைத்து பிடித்தனர்.
» மேற்குவங்க சோதனை சாவடியில் 2 கிலோ தங்கம் பறிமுதல்
» டெல்லியில் இளம்பெண் கழுத்து நெரித்து கொலை: காதலன் மும்பையில் கைது
இவர்களுடன் பால சுப்பிரமணியனின் மகள் லாவண்யாவும் கைது செய்யப்பட்டார். போலீஸ் தரப்பில் கூறுகையில், ‘வீர சக்தி மற்றும் பால சுப்பிரமணியனின் ஆகியோர் இந்நிறுவனத்தின் முக்கிய நிர்வாகிகள் ஆவர். இதில் வீரசக்தி, நடிகர் ஒருவர் தொடங்கிய கட்சி சார்பில் 2021 சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டவர்’ என்றனர்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
4 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
9 days ago
க்ரைம்
10 days ago
க்ரைம்
10 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
12 days ago
க்ரைம்
12 days ago
க்ரைம்
13 days ago