கரூர்: கரூர் குளித்தலை அருகே கல்லூரி வாகனத்தில் சென்ற சக மாணவரின் கழுத்தை அறுத்த மாணவரை போலீஸார் கைது செய்துள்ளனர். தன் பாலின ஈர்ப்பால் இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
திருச்சி மாவட்டம் முசிறி பார்வதிபுரத்தைச் சேர்ந்த, 20 வயது மாணவர் கரூர் மாவட்டம் புலியூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் எலெக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் முசிறியில் இருந்து கல்லூரி வேனில் கல்லூரிக்கு சென்று வருவது வழக்கம். திருச்சி மாவட்டம் தொட்டியத்தைச் சேர்ந்த 21 வயது மணவர் ஒருவரும், அதே கல்லூரியில் எம்.பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவரும் அதே கல்லூரி வாகனத்தில் சென்று வந்துள்ளார். இருவரும் நண்பர்களாக பழகி வந்த நிலையில் கடந்த சில நாட்களாக இருவரும் பேசிக்கொள்வதில்லை எனக் கூறப்படுகிறது.
இந்தநிலையில், இன்று (நவ. 27) இருவரும் கல்லூரி வேனில் கல்லூரிக்கு சென்றுள்ளனர். குளித்தலை அருகே சத்தியமங்கலம் பகுதியில வேன் சென்றுக் கொண்டிருந்தபோது தன்னுடன் பேசுமாறு தொட்டியத்தைச் சேர்ந்த மாணவர் முசிறியைச் சேர்ந்த மாணவரை வற்புறுத்தியுள்ளார். அதற்கு முசிறி மாணவர் எவ்வித பதிலும் அளிக்காமல் இருந்துள்ளார்.இதனால், ஆத்திரமடைந்த தொட்டியம் மாணவர் தனது பாக்கெட்டில் மறைத்து வைத்திருந்த வாழை இலைகள் அறுக்கப் பயன்படுத்தும் சிறிய கத்தியால் முசிறியைச் சேர்ந்த மாணவரின் கழுத்தை அறுத்துள்ளார். வலிதாங்க முடியாமல், மாணவர் சத்தம்போட, சக மாணவர்கள் தொட்டியத்தைச் சேர்ந்த மாணவரைத் தடுத்து காயம்பட்ட மாணவரை காப்பாற்றியுள்ளனர்.
இந்த தாக்குதலில் காயமடைந்த, மாணவரை குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சைக்கு அனுமதித்தனர். அம்மாணவருக்கு அங்கு கழுத்துப் பகுதியில் 10-க்கும் மேற்பட்ட தையல்கள் போடப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
» வேலூர் 50-வது வார்டில் ஜல்லி கற்கள் கொட்டிவிட்டு சாலை அமைக்க ‘மறந்த’ நிர்வாகத்தால் மக்கள் அவதி
» டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த போர்க்கால நடவடிக்கை: அரசுக்கு இபிஎஸ் வலியுறுத்தல்
இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த குளித்தலை போலீஸார், "தொட்டியத்தைச் சேர்ந்த மாணவரை கைது செய்தனர். மேலும் இதுகுறித்து போலீஸார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், மாணவர்கள் இருவரும் ஒரே கல்லூரியில் படிப்பதுடன், ஒரே வாகனத்தில் சென்று வருவதால் நண்பர்களாக பழகி வந்துள்ளனர். தாக்குதல் நடத்திய மாணவர் தன்பாலின ஈர்ப்புடன் பழகி வருவதை அறிந்த காயம்பட்ட மாணவர் அவருடன் பழகுவதை நிறுத்திக் கொண்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாணவர், தன்னுடன் பேச மறுத்த மாணவரை கத்தியால் கழுத்தை அறுத்துக் கொலை செய்ய முயற்சித்துள்ளார்" என்று கூறப்படுகிறது. தன்பாலின ஈர்ப்பால் சக மாணவரை கல்லூரி மாணவர் கழுத்தை அறுத்துக் கொலை செய்ய முயற்சித்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முக்கிய செய்திகள்
க்ரைம்
5 hours ago
க்ரைம்
10 hours ago
க்ரைம்
10 hours ago
க்ரைம்
20 hours ago
க்ரைம்
22 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
5 days ago