விருதுநகர்: மைசூரிலிருந்து தூத்துக்குடி செல்லும் விரைவு ரயிலில், பெங்களூரு சித்பேட்டிலிருந்து விருதுநகருக்கு அனுப்பிவைக்கப்பட்ட 5 பண்டல்களில் குட்கா கடத்தப்படுவதாக ரயில்வே போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.
மைசூரு விரைவு ரயில் நேற்று காலை விருதுநகர் வந்தபோது, பார்சலில் வந்த 5 பண்டல்களும் இறக்கப்பட்டன. அவற்றைவாங்குவதற்காக வந்த நபரை ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸார் பிடித்தனர்.
விசாரணையில், அவர் விருதுநகர் மாவட்டம் பாலவநத்தம்அருகேயுள்ள கேத்தநாயக்கன்பட்டியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன்(36) என்பது தெரியவந்தது. அவரை போலீஸார் கைது செய்தனர். ஜவுளி பார்சல் என்று குறிப்பிடப்பட்டு ரயிலில் அனுப்பப்பட்ட 5 பண்டல்களில் தலா 40 கிலோ வீதம், மொத்தம் 200 கிலோ குட்கா இருந்தது. அவற்றைப் போலீஸார் பறிமுதல் செய்தனர்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
20 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
7 days ago
க்ரைம்
7 days ago
க்ரைம்
8 days ago
க்ரைம்
10 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
12 days ago
க்ரைம்
13 days ago
க்ரைம்
13 days ago
க்ரைம்
13 days ago