ஈரோட்டில் முன்னாள் ராணுவத்தினரிடம் ரூ.30 கோடி மோசடி: தலைமறைவான 4 பேரை பிடிக்க தீவிரம்

By செய்திப்பிரிவு

ஈரோடு: ஈரோட்டில் முன்னாள் ராணுவத்தினர் உள்ளிட்ட பொதுமக்களிடம் ரூ.30 கோடி வரை முதலீடு பெற்றுமோசடி செய்த ஈரோடு நிதி நிறுவனம் தொடர்பான வழக்கு, பொருளாதார குற்றப் பிரிவுக்கு மாற்றப் பட்டுள்ளது.

ஈரோடு முனிசிபல் காலனியில் ஒரு தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இதில் பணம் முதலீடு செய்தால், அதிக வட்டி தருவதாக விளம்பரம் செய்யப்பட்டதையடுத்து, முன்னாள் ராணுவத் தினர் பலரும் பணத்தை முதலீடு செய்தனர். எம்.எல்.எம். முறையில், முன்னாள் ராணுவத்தினரைக் குறிவைத்து இந்த நிறுவனத்தினர் முதலீடுகளை பெற்றுள்ளது. இவ்வாறு முதலீடு பெற்ற நிதி நிறுவனத்தினர், கடந்த 2 ஆண்டுகளாக ஒப்புக்கொண்டபடி பணத்தைத் திருப்பித் தரவில்லை.

ரூ.30 கோடி: இதையடுத்து முதலீடு பெற்றுமோசடி செய்த நிதி நிறுவனத் தினர் மீது நடவடிக்கை எடுத்து,தங்களது பணத்தை திரும்பப் பெற்றுத் தருமாறு முன்னாள் ராணுவத்தினர் உள்ளிட்ட பாதிக்கப்பட் டோர் ஈரோடு ஆட்சியர் மற்றும் எஸ்.பி அலுவலகத்தில் மனு அளித்தனர். ஈரோடு எஸ்.பி ஜவகர் அறிவுறுத்தலின்படி, ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார், முதலீடு செய்து ஏமாந்தவர்களிடம் புகார்களைப் பெற்றனர். இதில், 22 பேர்மட்டும் ரூ.30 கோடி அளவுக்கு முதலீடு செய்து ஏமாந்துள்ளது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து ஈரோடு பொருளாதாரக் குற்றப்பிரிவுக்கு இந்த வழக்கு தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுபற்றி ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் கூறியதாவது: மோசடி நிதி நிறுவனத்தை நடத்தி வந்த ஈரோடு இடையன் காட்டு வலசைச் சேர்ந்த நவீன் குமார்(35), ராமநாதபுரத்தைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர்முத்து செல்வம்(62) ஆகியோர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட் டுள்ளது. அவர்களையும், இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் 4 பேரையும் தேடி வருகிறோம்.

இந்த நிதி நிறுவனத்தில் முதலீடுசெய்த நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் ஏமாந்துள்ளனர். ஆனால், இதுவரை 22 புகார்கள் மட்டும் வந்துள்ளன. பாதிக்கப்பட்ட அனைவரும் புகார் அளிக்க முன்வர வரவேண்டும்.

நிதி மோசடி தொடர்பான வழக் குகளில், மோசடியின் மதிப்பு ரூ.3 கோடிக்கு மேல் சென்றால், அவ்வழக்கை பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்ற வேண்டும் என்ற நீதிமன்ற வழிகாட்டுதலின்படி தற்போது வழக்கு அந்த பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE