சென்னை: சாலிகிராமத்தில் தந்தையை கொலை செய்த மகன் கைதுசெய்யப்பட்டுள்ளார். கொலைக்கான காரணம் குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. சென்னை, சாலிகிராமம், கே.கே.சாலை பகுதியைச் சேர்ந்தவர் அந்தோணி தாஸ் (61). இவரது மனைவிஜோஸ்பின் சாந்தி. இத்தம்பதிக்கு விஜய் ஆண்டனி(36), வினோத் ஆரோக்கியம் (33) ஆகிய இரு மகன்களும், 3-வதாக வினோதினிஎன்ற மகளும் உள்ளனர். 3 பேருக்கும் திருமணமாகிவிட்டது. அனைவரும் சாலிகிராமத்தில் தனித்தனியாக வசிக்கின்றனர். இந்நிலையில், அந்தோணிதாஸ், மனைவி ஜோஸ்பின் சாந்தி மற்றும் மகள் வினோதினி ஆகியோருடன் சாலிகிராமம், ம.பொ.சி. தெருவில் உள்ள மூத்த மகன் விஜய் ஆண்டனி வீட்டுக்கு பேரக்குழந்தையை பார்க்கச் சென்றார்.
அப்பொழுது அங்கு வந்த 2-வது மகன் வினோத் ஆரோக்கியம், தந்தை அந்தோணிதாஸிடம் தகராறு செய்தார். இந்த தகராறு முற்றியதில் ஆத்திரம் அடைந்த மகன் வினோத் ஆரோக்கியம் தயாராக கொண்டு வந்த கத்தியால் தந்தையை சரமாரியாகக் குத்தினார். இதைக் கண்டு அவரது தாய் மற்றும் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அந்தோணிதாசை மீட்டு அருகில் உள்ளமருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர்.
புழல் சிறையில் அடைப்பு: தகவல் அறிந்து விருகம்பாக்கம் காவல் நிலைய போலீஸார் நிகழ்விடம் விரைந்தனர். மேலும், அந்தோணிதாஸ் உடலை மீட்டு பிரேதப்பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தந்தையை கொலை செய்துவிட்டு தலைமறைவான மகன் வினோத் ஆரோக்கியத்தை பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீஸார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வினோத்ஆரோக்கியத்தைக் கைது செய்தனர். அவரை போலீஸார் நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் அடைத்தனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.
காரணம் என்ன? - கொலைக்கான காரணம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: கைது செய்யப்பட்ட வினோத் ஆரோக்கியத்துக்கும், அவரது வீட்டின் எதிரில் வசிப்பவருக்கும் இடையே அண்மையில் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, தந்தைஅந்தோணிதாஸ் எதிர் வீட்டுக்காரருக்கு ஆதரவாகப் பேசி, மகன் வினோத் ஆரோக்கியத்தை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மகன் சம்பவத்தன்று தனக்கு ஆதரவாக இல்லாமல், எதிர் வீட்டுக்காரருக்கு ஆதரவாகப் பேசியது தொடர்பாக தந்தையிடம் கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் முற்றி கொலையில் முடிந்துள்ளது என போலீஸார் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
15 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
7 days ago
க்ரைம்
7 days ago
க்ரைம்
10 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
12 days ago
க்ரைம்
13 days ago
க்ரைம்
13 days ago