சேலையூர்: புதிய பெருங்களத்தூர், விவேக் நகரை சேர்ந்தவர் பரத்குமார் (34). சோமோட்டோ உணவு டெலிவரி வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு தாம்பரம் – வேளச்சேரி சாலை, செம்பாக்கம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் பரத்குமாரின் மொபைல் போனை பறித்துக் கொண்டு தப்பினர். இதை சற்றும் எதிர்பார்க்காத பரத்குமார் சுதாரித்துக் கொண்டு மர்ம நபர்களை விரட்டி சென்றார். பள்ளிக்கரணை மேம்பாலத்தின் மீது சென்ற போது மர்ம நபர்கள் சென்ற இருசக்கர வாகனம் பாலத்தின் மீது நடந்து சென்ற இருவர் மீது பயங்கரமாக மோதி கீழே விழுந்தனர்.
இதனிடையே தகவலறிந்த பள்ளிக்கரணை போலீஸார், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை மடக்கி பிடித்தனர். வாகனம் மோதி காயமடைந்த இருவரை, தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். விசாரணையில், இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் சேலையூர், பராசக்தி நகரை சேர்ந்த தமீம் அன்சாரி (21), அஸ்தினாபுரத்தை சேர்ந்த 16 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. இருவரும், இன்ஸ்டாகிராம் மூலம் ஆறுமாதங்களுக்கு முன் நண்பர்களாகியுள்ளனர்.
இந்த பழக்கத்தில் அண்மையில் பழவந்தாங்கலில் வீட்டின் வெளியே நிறுத்தப்பட்டிருந்த பஜாஜ் பல்சர் இருசக்கர வாகனத்தை திருடினர். பின்னர் திருடிய பைக்கை பயன்படுத்தி வழிப்பறியில் ஈடுபட்டனர். இந்நிலையில் வேளச்சேரி சாலை வழியாக வந்தபோது பரத்குமாரின் மொபைல் போனை பறித்துள்ளனர். பரத்குமார் விடாமல் துரத்தியதால் பள்ளிக்கரணை மேம்பாலத்தில் வேகமாக சென்று, நடந்து சென்ற இருவர் மீது மோதியது தெரியவந்தது. இதையடுத்து, இந்த இருவரையும், சேலையூர் போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
இதற்கிடையில், வாகனம் மோதி, தாம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இருவரில் மேடவாக்கத்தை சேர்ந்த கண்ணன் (60) என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மற்றொரு நபர் மணிகண்டன் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். கைது செய்யப்பட்ட இருவரும், நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
21 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
9 days ago
க்ரைம்
9 days ago
க்ரைம்
10 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
12 days ago
க்ரைம்
12 days ago