சென்னை | நண்பரை கொலை செய்ய முயற்சித்தவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை

By செய்திப்பிரிவு

சென்னை: நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் முகமது இஸ்மாயில் சேட் (29). இவரும், சென்னை பிராட்வே மலையப்பெருமாள் பகுதியில் வசித்து வரும் முகமது யூசுப்கனியும், சலீம் அகமது என்பவரின் மளிகைக்கடையில் ஒன்றாக பணிபுரிந்து வந்தனர்.

இந்நிலையில் முகமது இஸ்மாயில் சேட்டை சலீம் அகமது வேலையில் இருந்து நீக்கியுள்ளார். இதற்கு முகமது யூசுப் கனி தான்காரணம் எனக்கூறி கடந்த 2022 மே17 அன்று அவரை இஸ்மாயில் சேட்கத்தியால் குத்தியுள்ளார். இதுதொடர்பாக முகமது யூசுப் கனிஅளித்த புகாரின்பேரில் எஸ்பிளனேடு போலீஸார் இஸ்மாயில் சேட்மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இந்த வழக்கு 17-வது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி எல்.ஆபிரகாம் லிங்கன் முன்பாக விசாரணைக்கு வந்தது. போலீஸ் தரப்பில், அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஜெ.சரவணன் ஆஜராகி வாதி்ட்டார்.

அதையடுத்து நீதிபதி, குற்றம் சாட்டப்பட்ட இஸ்மாயில் சேட் மீதான குற்றச்சாட்டுகள் தகுந்த ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டுள்ளதாகக்கூறி அவருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூ. 5ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப் பளித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE