செங்கல்பட்டு: காஞ்சிபுரம் மாவட்டம் பெரும்புதூர், மேவலூர் குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் குமரேசன் (41). இவரது மனைவிமாரியம்மாள் (35). இவர்கள் இருவரும் 2013-ம் ஆண்டு காதலித்துதிருமணம் செய்து கொண்டனர்.
குமரேசனுக்கு குடிப்பழக்கம் இருந்ததால் கணவன் - மனைவி இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. ஒரு கட்டத்தில் கர்ப்பவதியாக இருந்த மாரியம்மாளை, குமரேசன் அடித்ததால் கருக்கலைப்பு ஏற்பட்டது. இதனால் மருத்துவர்கள் குழந்தை பிறக்காது என கூறிவிட்டனர்.
இதன் காரணமாகவும் கணவன் - மனைவிக்கு இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 2014-ம் ஆண்டு ஒருநாள் இருவருக்கும் சண்டை அதிகமாகி குமரேசன், மனைவியை கத்தியால் கழுத்தை அறுத்து கொலைசெய்தார். இந்த சம்பவம் தொடர்பாக பெரும்புதூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து குமரேசனை கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் நேற்று செங்கல்பட்டு மகிளா நீதிமன்ற நீதிபதி குமரேசனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார். மேலும் இறந்த நபரின் தாயாருக்கு ரூ. 7,000 இழப்பீட்டுத் தொகையாக வழங்கவும் உத்தரவிட்டார்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
11 hours ago
க்ரைம்
22 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago