சென்னை: விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்ட ரவுடி மர்ம மரணம் அடைந்துள்ளார். அவரை போலீஸார் தாக்கியதே உயிரிழப்புக்கு காரணம் என அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
மயிலாப்பூர் பல்லக்கு மாநகரைச் சேர்ந்தவர் சுகுமார்(36). இவர் மீது ஒரு கொலை உட்பட 8 குற்ற வழக்குகள் உள்ளன. மயிலாப்பூர் காவல் நிலைய ரவுடி பட்டியலில் (சி பிரிவு) உள்ளார். இந்நிலையில், குற்ற வழக்கு தொடர்பான விசாரணைக்காக கடந்த மாதம் 27-ம்தேதி மயிலாப்பூர் காவல் நிலையம் சென்றுள்ளார். அப்போது,சுகுமாருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, அவரைபோலீஸார் 108 ஆம்புலன்ஸ் மூலம் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இதுகுறித்து,அவரதுகுடும்பத்தினருக்குத் தெரிவிக்கப்பட்டது. அவர்கள்சுகுமாரை மேல் சிகிச்சைக்காகமயிலாப்பூரில் உள்ள தனியார்மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை சுகுமார் மரணமடைந்தார். இதுகுறித்து மயிலாப்பூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர். விசாரணை என்றபெயரில் சுகுமாரை போலீஸார்தாக்கி உள்ளனர். இதுவே அவரது உயிரைப் பறித்து விட்டது எனசுகுமார் உறவினர்கள் குற்றம்சாட்டினர்.
» காசா போரை சில நாட்களுக்கு நிறுத்த வேண்டும்: அமெரிக்க அதிபர் பைடன் வலியுறுத்தல்
» நடிகர் ஜூனியர் பாலையா சென்னையில் காலமானார்: திரையுலகினர், ரசிகர்கள் அஞ்சலி
இதுகுறித்து போலீஸார் கூறும்போது, ‘‘சுகுமார் மயிலாப்பூர் காவல் நிலையம் வந்த நேரத்தில் அவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டது. இதையடுத்து நாங்கள்தான் அவரை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தோம்.
அவரது குடும்பத்தினருக்கும் உடனடியாகத் தகவல் தெரிவித்தோம். அவருக்கு ஏற்கெனவே ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய் இருந்துள்ளது. எனவே, நாங்கள் தாக்கினோம் என்பதில் உண்மை இல்லை.
மேலும், அவர் காவல் நிலையம் வந்தது தொடர்பான சிசிடிவி கேமரா பதிவுகள் உள்ளன. உடல்நலக்குறைவே சுகுமார் உயிரிழப்புக்கு காரணம்’’ என்றனர்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
6 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
7 days ago