போலி அரசு அலுவலகம் நடத்தி ரூ.4.15 கோடி மோசடி குஜராத்தில் 2 பேர் கைது

By செய்திப்பிரிவு

சோட்டா உதேபூர்: கடந்த 2021-ம் ஆண்டு முதல் குஜராத்தின் போதேலி நகரில் ‘சொட்டுநீர் பாசன திட்டங்களுக்கான செயற் பொறியாளர் அலுவலகம்’ என்ற பெயரில் ஒரு அரசு அலுவலகம் இயங்கி வந்துள்ளது. இதில் சந்தீப் ராஜ்புத் என்பவர் செயற் பொறியாளராக இருந்துள்ளார். அவர் 93 அரசு திட்டங்களுக்கான ஒப்பந்தங்களைப் பெற்றுள்ளார். இதற்காக ரூ.4.15 கோடி நிதியை அரசிடமிருந்து பெற்றுள்ளார்.

இந்த சூழ்நிலையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இளநிலை எழுத்தராக பணிபுரிந்து வரும் ஜாவேத் மக்னோஜியா போலி அரசு அலுவலகம் குறித்து புகார் செய்துள்ளார். இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் சச்சின் குமார் கடந்த அக்டோபர் 25-ம் தேதி ஒரு கூட்டத்தை நடத்தி உள்ளார். அப்போதுதான் போதேலி நகரில் சொட்டு நீர்ப்பாசனத்துக்கான செயற் பொறியாளர் அலுவலகம் இல்லை என்பது தெரியவந்துள்ளது.

இதையடுத்து, ஆட்சியரின் உத்தரவின் பேரில் அந்த அலுவலகத்தில் செயற் பொறியாளர் என்று கூறிக்கொண்டு மோசடியில் ஈடுபட்ட சந்தீப் ராஜ்புத் மற்றும் அவருக்கு உறுதுணையாக செயல்பட்ட அபு பக்கர் ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்துள்ளனர். அவர்கள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

6 days ago

க்ரைம்

7 days ago

க்ரைம்

8 days ago

க்ரைம்

8 days ago

க்ரைம்

11 days ago

க்ரைம்

12 days ago

க்ரைம்

12 days ago

க்ரைம்

13 days ago

க்ரைம்

14 days ago

க்ரைம்

14 days ago

மேலும்