பாஜக ஊராட்சி தலைவர் தற்கொலை: அதிகாரிகள் மீது உறவினர்கள் புகார்

By செய்திப்பிரிவு

தென்காசி: தென்காசி மாவட்டம் சங்குபட்டி ஊராட்சித் தலைவர் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டார். ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள்தான் அவரது தற்கொலைக்கு காரணம் என்று உறவினர்கள் குற்றம்சாட்டினர்.

குருவிகுளம் ஊராட்சி ஒன்றியம் சங்குப்பட்டி ஊராட்சித் தலைவர் ராதா(42). இவர் பாஜக அறிவுசார் பிரிவு மாவட்ட துணைத் தலைவராகவும் பொறுப்பு வகித்தார். இவருக்கு மனைவி ரம்யா மற்றும் ஒருமகன், மகள் உள்ளனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் ராதா விஷமருந்திய நிலையில் மயங்கிக் கிடந்துள்ளார். குடும்பத்தினர் அவரை மீட்டுசங்கரன்கோவில் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக மதுரையில் உள்ளதனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சைபலனின்றி ராதா நேற்று உயிரிழந்தார். இது குறித்து திருவேங்கடம் போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.

ஊராட்சியில் பல்வேறு பணி களுக்கு ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் நிதி ஒதுக்காததால், தனது சொந்த பணத்தில் இருந்து ராதா பணிகளை மேற்கொண்டதாகவும், தொடர்ந்து பணம் ஒதுக்காததால் ஏற்பட்ட மன உளைச்சலில் அவர் தற்கொலை செய்துகொண்டதாகவும் உறவினர்கள் குற்றம் சாட்டினர்.

மேலும், ஊராட்சி ஒன்றியஅதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்தால்தான் உடலைப் பெறுவோம் என்று காவல் துறையினரிடம் தெரிவித்துள்ளனர். அவர்களிடம் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

13 hours ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

மேலும்