சென்னை | மகளை கொலை செய்து தற்கொலை முயற்சி: தாய்க்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை

By செய்திப்பிரிவு

சென்னை: மகளை கொலை செய்து தற்கொலைக்கு முயன்ற தாய்க்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னைமகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பெங்களூருவை சேர்ந்த சந்திரசேகரன் என்பவரது மனைவி பவித்ரா. இவர் தனது 6 வயது மகள், 3 வயது மகன் ஆகியோரை அழைத்துக் கொண்டு கடந்த 2019-ம் ஆண்டு சென்னை மெரினா கடற்கரைக்கு சென்றுள்ளார். குடும்பப் பிரச்சினை காரணமாக தனது மகள், மகனை கொலை செய்ய பிளேடால் அறுத்துவிட்டு, தனது கழுத்தையும் பிளேடால் அறுத்து தற்கொலைக்கு முயன்றார். இதில் மகள் மட்டும் உயிரிழந்தார். பவித்ரா தனது மகனுடன் உயிர் பிழைத்தார். அதையடுத்து மெரினா போலீஸார்பவித்ராவை கொலை வழக்கில் கைது செய்தனர்.

இந்த வழக்கு சென்னை அல்லிகுளம் மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதி டி.எச்.முகமது பாரூக் முன்பாக நடந்துவந்தது. அரசு தரப்பில் சிறப்பு வழக்கறிஞர் ஆரத்திபாஸ்கரன் ஆஜராகி வாதிட்டார். அதையடுத்து நீதிபதி,‘‘குடும்ப பிரச்சினை காரணமாக ஏற்பட்ட மன அழுத்தத்தில் இக்கொலை நடந்துள்ளது. பவித்ரா தனது மகளை உள்நோக்கத்துடன் கொலை செய்யவில்லை என்பதால், இந்த கொலை வழக்கை கொலை செய்யும் நோக்கம் இல்லாத தாக்குதல் என்ற கண்ணோட்டத்துடன் பார்க்க வேண்டியுள்ளது’’ எனக் கூறி பதவித்ராவுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.1,500 அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

6 days ago

க்ரைம்

7 days ago

க்ரைம்

8 days ago

க்ரைம்

8 days ago

க்ரைம்

11 days ago

க்ரைம்

12 days ago

க்ரைம்

12 days ago

க்ரைம்

13 days ago

க்ரைம்

14 days ago

க்ரைம்

14 days ago

மேலும்