சென்னை | அடுக்குமாடி குடியிருப்பில் நடிகை மாயாவின் மகன் மர்ம மரணம்

By செய்திப்பிரிவு

சென்னை: விருகம்பாக்கம் அடுத்த சாலிகிராமம் புஷ்பா காலனியில் வசிப்பவர் சினிமா நடிகை மாயா. இவரது மகன் விக்னேஷ் (40).இவர் நடிகை பாபிலோனாவின் தம்பி.

விக்னேஷ் மீது விருகம்பாக்கம் காவல் நிலையத்தில், போலீஸாரை தாக்கியதுஉட்பட குற்ற வழக்குகள் உள்ளன. குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக,விருகம்பாக்கம் தசரதபுரம், 8-வது தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வசித்து வந்தார்.

இந்நிலையில், நேற்று காலையிலிருந்து விக்னேஷ் செல்போனை எடுக்காததால், அவரது நண்பர், வீட்டுக்குச் சென்று பார்த்துள்ளார். அப்போது, வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்ததால், விருகம்பாக்கம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது விக்னேஷ் படுக்கையறையில் இறந்து கிடந்தது தெரியவந்தது.

இதையடுத்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கடந்தசில ஆண்டுகளாக அடுக்குமாடி குடியிருப்பில், விக்னேஷ் தனியாக வசித்து வந்தார். அவரது அறை முழுவதும் மது பாட்டில்கள் அதிக அளவில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

2020-ல் மர்ம கும்பலால் விக்னேஷ் வெட்டப்பட்டு படுகாயமடைந்து, தீவிர சிகிச்சைக்கு பிறகு குணமடைந்திருந்தார். மேலும், மதுப் பழக்கமும் இருந்ததாகக் கூறப்படுகிறது. எனவே, அதிக மதுபோதை காரணமாக இறந்தாரா என போலீஸார் விசாரிக்கின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

6 days ago

க்ரைம்

6 days ago

க்ரைம்

9 days ago

க்ரைம்

10 days ago

க்ரைம்

10 days ago

க்ரைம்

11 days ago

க்ரைம்

11 days ago

க்ரைம்

12 days ago

க்ரைம்

12 days ago

க்ரைம்

12 days ago

மேலும்