சென்னை: சென்னை சேத்துப்பட்டு பகுதியை சேர்ந்தவர் ஜேக்கப் (67). தொழிலதிபரான இவர், எழுதுபொருள் உபகரணங்கள் தயாரிப்பு நிறுவனம் நடத்திவருகிறார். இந்த நிறுவனத்தின் தலைமை அலுவலகம் கீழ்ப்பாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள கல்லூரி அருகே அமைந்துள்ளது.
ஆயுத பூஜையையொட்டி அலுவலகத்துக்கு 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டது. இந்நிலையில் விடுமுறை முடிந்து அலுவலகம் மீண்டும்திறக்கப்பட்டது. அப்போது அலுவலகத்தில் உள்ள தனது அறை டிராயரில் வைத்திருந்த ரூ.41 லட்சம் ரொக்கம் மாயமாகி இருந்ததைக் கண்டுஜேக்கப் அதிர்ச்சி அடைந்தார்.
உடனடியாக இதுகுறித்து கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப் பட்டது. இதைத் தொடர்ந்து அலுவலகத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கைப்பற்றிய போலீஸார், அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் இந்த பணத்தை திருடினார்களா? அல்லது மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனரா? என்ற கோணத்தில் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
4 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
8 days ago
க்ரைம்
9 days ago
க்ரைம்
9 days ago
க்ரைம்
10 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
12 days ago
க்ரைம்
12 days ago