கோடநாடு வழக்கில் ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநரிடம் சிபிசிஐடி போலீஸார் 8 மணி நேரம் விசாரணை

By செய்திப்பிரிவு

கோவை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநரிடம் 8 மணி நேரம் சிபிசிஐடி போலீஸார் கோவையில் விசாரணை நடத்தினர்.

நீலகிரி மாவட்டம் கோடநாடு பகுதியில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தங்கும் இடமாக பயன்படுத்தி வந்த எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கொள்ளை முயற்சி நடந்தது. இச்சம்பவத்தின் போது, எஸ்டேட் காவலாளி ஓம்பகதூர் கொல்லப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக சயான் உள்ளிட்ட 10 பேர் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.

அதன் பின்னர், தடயங்களை அழித்ததாக உயிரிழந்த கனகராஜின் சகோதரர் தனபால், அவரது உறவினர் ரமேஷ் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கு தற்போது சிபிசிஐடி போலீஸாரால் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் கார் ஓட்டுநராக பணியாற்றிய ஐயப்பன் என்பவரிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி போலீஸார் முடிவு செய்தனர்.

இதற்காக 17-ம் தேதி சிபிசிஐடி அலுவலகத்துக்கு நேரில் ஆஜராகுமாறு சம்மனும் அனுப்பப்பட்டு இருந்தது. அதன்படி, ஓட்டுநர் ஐயப்பன் நேற்று காவலர் பயிற்சிப் பள்ளி வளாகத்தில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்துக்கு விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் கூடுதல் எஸ்.பி முருகவேல் தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தினர்.

கோடநாடு எஸ்டேட் தொடர்பாகவும், ஓட்டுநர் கனகராஜ் தொடர்பாகவும், அவரது சகோதரர் தனபால் தொடர்பாகவும் விசாரணை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து 8 மணி நேர விசாரணைக்கு பிறகு நேற்று மாலை அவர் அனுப்பி வைக்கப்பட்டார்.

ஓட்டுநர் ஐயப்பன் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் 1991 முதல் ஓட்டுநராக இருந்து வந்தேன். 2021-ம் ஆண்டு வரை பணியில் இருந்தேன். 2000-ம் ஆண்டுக்கு பின்னர் தான் கனகராஜ் ஓட்டுநர் பணிக்கு வந்தார். அவரது நடவடிக்கை சரியில்லாததால் பின்னர் அவர் பணி நீக்கம் செய்யப்பட்டார்.

முன்னரே, உதகையில் என்னிடம் போலீஸார் ஒருமுறை விசாரணை நடத்தினர். தற்போது 2-வது முறையாக விசாரிக்கின்றனர். கனகராஜின் அண்ணன் தனபால் குறித்து எனக்கு எதுவும் தெரியாது. கடந்த முறையும் கனகராஜ் குறித்து என்னிடம் கேட்டனர். தற்போதும் கனகராஜ் குறித்து கேட்டனர். ஓட்டுநராக இருந்த போது, கனகராஜ் குறித்து தெரிந்த தகவல்களை தெரிவித்தேன்.

குறிப்பாக கனகராஜின் நடவடிக்கைகள், அவரது கேரக்டர் தொடர்பாக போலீஸார் கேட்டனர். 3 சிபிசிஐடி அதிகாரிகள் விசாரித்தனர். 2 ஆண்டுகள் தான் கனகராஜ் ஓட்டுநராக அங்கு பணியாற்றினார். ஓட்டுநர்கள் அரசியல் வாதிகளுடன் தொடர்பில் இருக்க முடியாது. கோடநாடு எஸ்டேட் பங்களாவுக்குள் தனிப்பட்ட முறையில் யாரும் செல்ல முடியாது.

ஜெயலலிதாவை பங்களா வாசலில் விட்டு விட்டு வந்து விடுவோம். ஓட்டுநர் கனகராஜ் எங்கள் எல்லாருக்கும் சங்கடத்தை கொடுத்து விட்டார். 30 ஆண்டுகள் போயஸ் கார்டனில் பணியாற்றி உள்ளேன்,’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

15 hours ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

6 days ago

க்ரைம்

7 days ago

க்ரைம்

8 days ago

மேலும்