வத்தலகுண்டுவில் தொழிலாளி கொலை: உறவினர்கள் சாலை மறியல்

By செய்திப்பிரிவு

வத்தலகுண்டு: வத்தலகுண்டு நகரில் கட்டிடத் தொழிலாளியை குத்திக் கொலை செய்தவர்களை கைது செய்யக் கோரி காவல் நிலையம் முன் உறவினர்கள் மறியல் செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் பழைய வத்தலகுண்டு பட்டாளம்மன் கோயில் பகுதியைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளி பாண்டியராஜன் (30). இவர், வத்தலகுண்டு நகரில், திண்டுக்கல் சாலையில் உள்ள அரசு மதுபான கடையின் பின்புறம் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து வத்தலகுண்டு போலீஸார் வழக்குப் பதிவு செய்து நடத்திய விசாரணையில், மது குடித்தபோது ஏற்பட்ட தகராறில் பாண்டியராஜன் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.

இந்நிலையில் குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி பாண்டியராஜனின் உறவினர்கள் வத்தலகுண்டு காவல் நிலையம் முன் சாலை மறியல் செய்தனர். இதனால் வத்தலகுண்டு - பெரியகுளம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. குற்றவாளிகளை விரைவில் கைது செய்வதாக போலீஸார் உறுதியளித்ததைத் தொடர்ந்து அனை வரும் கலைந்து சென்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

15 hours ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

8 days ago

க்ரைம்

9 days ago

க்ரைம்

9 days ago

க்ரைம்

10 days ago

க்ரைம்

11 days ago

க்ரைம்

11 days ago

க்ரைம்

12 days ago

க்ரைம்

12 days ago

மேலும்