கடலூர்: கடலூர் சிதம்பரம் சாலையில், செல்லங்குப்பம் பகுதியில் இருசக்கர வாகன விற்பனை நிலையம் செயல்பட்டு வருகிறது.
நேற்று காலை கடை ஊழியர்கள் ஷோரூமை திறந்த போது, உள்ளே லாக்கர் உடைக்கப்பட்டு, அதிலிருந்த ரூ.2.91 லட்சம் ரொக்கம் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்டிருந்த, ஒரு கிராம் எடையிலான 6 தங்க நாணயங்கள் ஆகியவை திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக விற்பனை நிலைய மேலாளர் முருகன் திருப்பாதிரி புலியூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
போலீஸார் மற்றும் தடயவியல் நிபுணர்கள் அங்கு சென்று, தடயங்களைச் சேகரித்தனர். மேலும், திருட்டு குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த இருசக்கர வாகன விற்பனை நிலையத்தை அமைச்சர் பொன்முடியின் மனைவி விசாலாட்சி நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
க்ரைம்
22 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
7 days ago
க்ரைம்
7 days ago
க்ரைம்
8 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
12 days ago
க்ரைம்
13 days ago
க்ரைம்
13 days ago
க்ரைம்
13 days ago