மதுரை: நியோ மேக்ஸ் மோசடி வழக்கில் பெண் இயக்குநர் உட்பட 2 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர்.
மதுரை உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் நியோ மேக்ஸ் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனம் கிளைகளை அமைத்து, கூடுதல் வட்டி,டெபாசிட் செய்யும் பணத்துக்கு இரட்டிப்புத் தொகை தருவதாகக் கூறி பல கோடி ரூபாய் வசூலித்தது. ஆனால், கூறியபடி பணத்தை திருப்பித் தரவில்லை என பாதிக்கப்பட்டவர்கள் புகார் தெரிவித்தனர்.
அதன்பேரில் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்கள் மதுரைகமலக்கண்ணன் பாலசுப்பிரமணியன், திருச்சி வீரசக்தி மற்றும் இயக்குநர்கள், முகவர்கள் என 90-க்கும் மேற்பட்டோர் மீது மதுரை பொருளாதாரக் குற்றப் பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
இதுதொடர்பாக, பொருளாதாரக் குற்றப் பிரிவு எஸ்.பி.ஜோஸ் தங்கையா, சிறப்புடிஎஸ்பி மனிஷா தலைமையிலான தனிப் படையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த வழக்கில் கமலக்கண்ணன், சிங்கார வேலன்உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், நியோ மேக்ஸ் துணை நிறுவனமான ரோபோக்கோ ப்ராப்பர்ட்டிஸ் நிறுவன இயக்குநர் தேவகோட்டை மைக்கேல் செல்வி (45), தென்காசி சென்ட்ரியோ நிறுவன இயக்குநர் நடேஷ் பாபு (52) ஆகியோரை மதுரையில் தனிப்படையினர் நேற்று கைது செய்தனர்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
16 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
8 days ago
க்ரைம்
9 days ago
க்ரைம்
9 days ago
க்ரைம்
10 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
12 days ago
க்ரைம்
12 days ago