சென்னை: வள்ளலார் நகரிலிருந்து திருவேற்காடு செல்லும் பேருந்து அரும்பாக்கம் என்எஸ்கே நகர் பேருந்து நிறுத்தத்தில் மதியம் 2 மணியளவில் நின்றபோது பேருந்தில் இருந்த பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டு அது மோதலாக மாறியது. ஒரு தரப்பினர் மீது மற்றொரு தரப்பினர் கைகளாலும், கூர்மையான ஆயுதங்களாலும் தாக்கிக்கொண்டனர்.
இதைக் கண்டு பேருந்தில் இருந்த பயணிகளும்,சாலையோரம் சென்ற பொதுமக்களும் அதிர்ச்சியடைந்தனர். இதனால், அந்த பகுதியே பரபரப்பானது.
இதுகுறித்து உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல்கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்து அரும்பாக்கம் காவல் நிலைய போலீஸார் சம்பவ இடம் விரைந்தனர். போலீஸாரைக் கண்டதும் மோதலில் ஈடுபட்ட மாணவர்கள் சிதறி ஓடினர்.
இறுதியாக மோதலில் ஈடுபட்ட17 மாணவர்களை போலீஸார் விரட்டிப் பிடித்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். அங்கு அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த மோதலில் மாணவர் ஒருவரும் காயம் அடைந்தார்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
7 days ago
க்ரைம்
8 days ago
க்ரைம்
8 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
12 days ago
க்ரைம்
12 days ago
க்ரைம்
13 days ago
க்ரைம்
14 days ago
க்ரைம்
14 days ago