நாகர்கோவில்: குலசேகரத்தில் மருத்துவக் கல்லூரி மாணவி தற்கொலை வழக்கில் பேராசிரியர், சக மாணவர், மாணவி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
குலசேகரம் நாகக்கோடு பகுதியில் செயல்பட்டு வரும் ஸ்ரீமூகாம்பிகா மருத்துவக் கல்லூரியில், தூத்துக்குடியைச் சேர்ந்த சிவக்குமார் என்பவரது மகள் சுஜிர்தா (27), இரண்டாமாண்டு முதுநிலை மருத்துவப் படிப்பு பயின்று வந்தார்.
இந்நிலையில், அங்குள்ள விடுதியில் சுஜிர்தா இறந்துகிடந்தார். ஊசி போட்டு அவர் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தில், பேராசிரியர் ஒருவர் பாலியல் தொல்லை அளித்ததாகக் குறிப்பிட்டிருந்தாராம்.
இந்நிலையில், மாணவியை தற்கொலைக்குத் தூண்டியதாக பேராசிரியர் பரமசிவம், உடன் படித்த மாணவர் மற்றும் மாணவி ஆகியோர் மீது குலசேகரம் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இவர்கள் மூவரிடமும் நாகர்கோவில் ஏடிஎஸ்பி மதியழகன் விசாரணை மேற்கொண்டார். அதேபோல, சுஜிர்தாவுடன் படித்த சகமாணவிகள் மற்றும் அனைத்து பேராசிரியர்களிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தப்பட்டது.
» ரத்தக் கொதிப்பு காரணமாக அமைச்சர் செந்தில் பாலாஜி மருத்துவமனையில் அனுமதி
» “விருதுநகர், கன்னியாகுமரியில் காங்கிரஸ் போட்டியிட விருப்பம்” - கே.எஸ்.அழகிரி
இதற்கிடையே, ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரிமருத்துவமனையில் சுஜிர்தாவின் உடல் பிரேதப் பரிசோதனைசெய்யப்பட்டு, அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
முக்கிய செய்திகள்
க்ரைம்
14 hours ago
க்ரைம்
19 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
7 days ago