தருமபுரி: பாப்பாரப்பட்டி அருகே மனைவியை கொலை செய்த கணவரை போலீஸார் கைது செய்தனர்.
தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகிலுள்ள பிக்கிலி ஊராட்சிக்கு உட்பட்ட பெரியூர் கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி பெருமாள் (60). இவர் மனைவி தனம் (55). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இவர்களுக்கு மணமாகி தனியாக வசித்து வருகின்றனர். பெருமாள், தனம் மட்டும் பெரியூர் கிராமத்தில் வசித்து வந்தனர். தம்பதியரிடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில், நேற்று முன்தினம் தகராறு ஏற்பட்டபோது பெருமாள், தன் மனைவியை தாக்கி கத்தியால் குத்தியதில் தனம் உயிரிழந்தார். மனைவியை கொலை செய்த பின்னர், தன் கையை தானே கத்தியால் அறுத்துக் கொண்ட பெருமாள், மர்ம நபர்கள் தன்னைத் தாக்கி விட்டு தன் மனைவியை தூக்கிச் சென்று விட்டதாக அப்பகுதியில் உள்ளவர்களிடம் கூறியுள்ளார்.
அவரது பேச்சில் சந்தேகமடைந்தவர்கள் இது குறித்து பாப்பாரப்பட்டி காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸார் தனத்தின் உடலை கைப் பற்றி தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததுடன், பெருமாளை கைது செய்தனர்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
10 hours ago
க்ரைம்
11 hours ago
க்ரைம்
15 hours ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
7 days ago
க்ரைம்
8 days ago
க்ரைம்
9 days ago
க்ரைம்
9 days ago
க்ரைம்
12 days ago
க்ரைம்
13 days ago
க்ரைம்
13 days ago