கோவையில் சவர்மா விற்பனை கடைகளில் 102 கிலோ பழைய இறைச்சி பறிமுதல்

By செய்திப்பிரிவு

கோவை: கோவை மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கு.தமிழ்செல்வன் தலைமையில் உணவு பாதுகாப்பு துறை, மாநகராட்சி அலுவலர்களுடன் இணைந்து கோவை புதூர், கணபதி, சரவணம்பட்டி, ராமநாதபுரம், வடவள்ளி, அவிநாசி சாலை, பீளமேடு, சூலூர், சிங்காநல்லூர், பொள்ளாச்சி ஆகிய பகுதிகளில் சவர்மா தயாரித்து விற்பனை செய்யும் கடைகளில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

இதில், மொத்தம் 54 கடைகளில் 102 கிலோ பழைய இறைச்சியும், 2.50 கிலோ சவர்மா என மொத்தம் 104.5 கிலோ இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.57,400 ஆகும். மேலும் ஆய்வின் போது 2 உணவு மாதிரிகள் எடுக்கப்பட்டன. ஆய்வின் போது குறைகள் கண்டறியப்பட்ட 9 கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

இது போன்ற திடீர் கள ஆய்வுகள் தொடர்ந்து நடைபெறும் எனவும், சவர்மா தயாரிப்பில் ஏதேனும் சுகாதாரக் குறைபாடுகளை கண்டறிய நேரிட்டால் 9444042322 என்ற வாட்ஸ் அப் எண்ணில் தகவல் தெரிவிக்கலாம் எனவும் கு.தமிழ் செல்வன் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE