சென்னை விமான நிலையத்தில் 13 கிலோ தங்கம், ஐபோன் உள்ளிட்டவை பறிமுதல்: கடத்தலில் ஈடுபட்டதாக 113 பயணிகள் மீது வழக்குப் பதிவு

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை விமான நிலையத்தில் ரூ.14 கோடி மதிப்புள்ள 13 கிலோதங்கம், 120 ஐபோன்கள், லேப்டாப்,வெளிநாட்டு சிகரெட், குங்குமப்பூஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. கடத்தலில் ஈடுபட்டதாக 113 பயணிகள் மீது சுங்கத்துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஓமன் நாட்டு தலைநகர் மஸ்கட்டில் இருந்து ஓமன் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று முன்தினம் காலை 8 மணிக்கு சென்னை விமான நிலையத்துக்கு வந்தது. இந்த விமானத்தில் பயணிகள் தங்கம், ஐபோன், லேப்டாப், வெளிநாட்டு சிகரெட் கடத்தி வருவதாக விமான நிலைய சுங்கத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்ததால், மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கும் தகவல் கொடுத்தனர். விமானத்தில் வந்த 186 பயணிகளையும் நிறுத்தி பல மணி நேரமாக அதிகாரிகள் விசாரணை நடத்தினர். கடத்தலில் தொடர்பு இல்லாத 73 பேரை வெளியே செல்ல அனுமதித்தனர்.

பின்னர், 113 பயணிகளிடம் பிற்பகல் 3 மணி வரை விசாரணை நடத்தினர். விசாரணையின்போது, சுங்கத்துறை அலுவலகத்திலேயே அவர்களுக்கு உணவும் ஏற்பாடு செய்தனர். அனைவரும் சாப்பிட்டுமுடிந்ததும் மீண்டும் விசாரணையை தொடங்கிய அதிகாரிகள், அவர்களை சோதனை செய்தனர்.

நள்ளிரவு வரை நடந்த சோதனையில் பயணிகள் உள்ளாடைகளுக்குள் தங்கப் பசைகள் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சிலர் சூட்கேஸ்லைனிங் உள்ளே தங்கத்தை ஸ்ப்ரிங் கம்பிகளாக மாற்றி மறைத்து வைத்திருந்தனர். சூட்கேஸ் மற்றும் பைகளில் ரகசியஅறைகள் வைத்து 120 ஐபோன்,84 ஆண்ட்ராய்டு போன், வெளிநாட்டு சிகரெட்கள், பதப்படுத்தப்பட்ட குங்குமப்பூக்கள், லேப்டாப்புகள் உள்ளிட்ட பொருட்களும் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.

மொத்தம் ரூ.14 கோடி மதிப்புள்ள 10 கிலோ தங்கக்கட்டிகள், 3 கிலோ தங்க பசைகள் உட்பட அனைத்து பொருட்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 113பயணிகள் மீதும் சுங்க சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

ஒரு கோடி ரூபாய்க்கு மேல்கடத்தல் பொருட்கள் கொண்டு வருபவர்களை மட்டுமே, சுங்கசட்டப்படி கைது செய்ய முடியும்.அதற்கு குறைவாக கடத்தல் பொருட்கள் இருந்தால், வழக்குகள் பதிவு செய்து, ஜாமீனில் விடுவிக்கப்படுவார்கள். அதனால், 113பேரையும் அதிகாரிகள் ஜாமீனில் விடுவித்தனர். 113 பேரையும் 'கடத்தல் குருவிகளாக' பயன்படுத்திய கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் யார் என்று அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

16 mins ago

க்ரைம்

7 hours ago

க்ரைம்

18 hours ago

க்ரைம்

19 hours ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

4 days ago

மேலும்