செங்கல்பட்டு | சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்தவருக்கு 7 ஆண்டு சிறை

By செய்திப்பிரிவு

செங்கல்பட்டு: கிண்டி அனைத்து மகளிர் காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 2020-ம் ஆண்டு செக்யூரிட்டியாக பணிபுரிந்து வந்த பிரபாகர் என்ற நபர் தன் வசிப்பிடம் அருகே தனக்கு உணவு சமைத்து கொடுக்கும் பெண்ணின் 9 வயது சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக சிறுமியின் தாயார் கிண்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீஸார் பிரபாகரனை கைது செய்து செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். வழக்கு விசாரணைகள் செங்கல்பட்டு நீதிமன்ற நீதிபதி தமிழரசி முன்பு நடைபெற்று வந்தன.

வழக்கு விசாரணைகள் முடிவடைந்த நிலையில் குற்றம் சாட்டப்பட்ட பிரபாகர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு இரண்டு பிரிவுகளில் 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ 3,000 அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ 50,000 இழப்பீடு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார். அரசு தரப்பில் சிறப்பு அரசு வழக்கறிஞர் புவனேஸ்வரி ஆஜராகி வாதிட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

21 hours ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

6 days ago

க்ரைம்

9 days ago

க்ரைம்

9 days ago

க்ரைம்

10 days ago

க்ரைம்

11 days ago

க்ரைம்

11 days ago

க்ரைம்

11 days ago

க்ரைம்

12 days ago

க்ரைம்

12 days ago

மேலும்