விருத்தாசலம் அருகே திமுக பிரமுகர் மீது துப்பாக்கி சூடு: 6 பேர் மீது போலீஸில் புகார்

By செய்திப்பிரிவு

கடலூர்: விருத்தாசலம் அருகே முன்விரோ தத்தில் 6 பேர் கும்பல் திமுக பிரமுகரை துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பியோடியது. கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள மணவா ளநல்லூரைச் சேர்ந்தவர் முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏ தியாகராஜன் மகன் இளையராஜா(45). இவர் உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற மாவட்ட பொறுப்பாளராக உள்ளார்.

மேலும் வள்ளலார் குடில் நடத்தி வருகிறார். இயற்கைவிவசாயியான இவர் கொளஞ்சி யப்பர் கோயில் அருகே உள்ள தனது நிலத்துக்கு நேற்று மாலை சென்றார். வயலுக்கு சென்றுவிட்டு, திரும்பும் போது, 6 பேர்கொண்ட கும்பல் இரண்டு துப்பாக்கி யால் இளையராஜாவை நோக்கி சுட்டது.

இதில் அவரது முன்பக்க தோள்பட்டையிலும், பின்பக்க இடுப்பிலும் குண்டு பாய்ந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் சுதாரித்துக் கொண்டு அங்கிருந்து காருக்கு சென்றார். காரின் அருகே வந்த அந்த கும்பல் மீண்டும், கார் கண்ணாடி வழியாக சுட்டு விட்டு, அங்கிருந்து தப்பித்து ஓடியது. துப்பாக்கி சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி சென்று இளையராஜாவை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

பின்னர்அவர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இது குறித்து தகவலறிந்த கடலூர் எஸ்பி ராஜாராம் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்.

இந்த நிலையில் மணவாளநல்லூர் கிராமத்தை சேர்ந்த 2 பேர் மற்றும் அடையாளம் தெரியாத 4 பேர் என மொத்தம் ஆறு பேர் தன்னை சுட்டதாக இளையராஜா விருத்தாசலம் போலீஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். முன் விரோதம் காரணமாக, இச்சம்பவம் நடந்திருக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்தனர்.தொடர்ந்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

5 hours ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

மேலும்