சென்னை: திருவாரூர் மாவட்டம் கோவிலூரை சேர்ந்தவர் ஜெகன் (48). இவர், சென்னை நொளம்பூர் ரெட்டிபாளையம் சாலையில் கடந்த ஒருமாதமாக மீன் கடை நடத்தி வந்தார். கடந்த5-ம் தேதி இரவு இவரது மீன் கடையில் நுழைந்த 6 பேர் கொண்ட கும்பல், ஜெகனைவெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பியது.
இதுகுறித்து நொளம்பூர் போலீஸார் விசாரணையை தொடங்கினர். கடந்த 2021-ம்ஆண்டு அதிமுக ஒன்றிய கவுன்சிலராகஇருந்த திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்தராஜேஷ் என்பவரை ஜெகன் தனது நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்ததாகவும் இதற்கு பழிவாங்கும் விதமாக ஜெகன் கொலை செய்யப்பட்டதும் விசாரணையில் தெரியவந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில், ஜெகன் கொலை வழக்குதொடர்பாக திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையைச் சேர்ந்த மகேஷ் (38), அறிவழகன் (28), சிவசுப்பிரமணியன் (28), சுதாகர் (27)ஆகிய 4 பேர் நொளம்பூர் காவல் நிலையத்தில் நேற்று சரணடைந்தனர். அவர்களை கைது செய்த போலீஸார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 4 பேரையும் காவலில் எடுத்து விசாரித்து கொலைக்கான பின்னணியை அறிய போலீஸார் முடிவு செய்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
2 hours ago
க்ரைம்
2 hours ago
க்ரைம்
14 hours ago
க்ரைம்
15 hours ago
க்ரைம்
19 hours ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
7 days ago
க்ரைம்
8 days ago
க்ரைம்
9 days ago
க்ரைம்
9 days ago
க்ரைம்
12 days ago