சென்னை: தமிழகத்திலிருந்து திருடப்பட்ட பிற்கால சோழர்கால கிருஷ்ணர் சிலை அமெரிக்காவில் இருப்பதை சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீஸார் கண்டறிந்துள்ளனர். அதை மீட்டு தமிழகத்துக்கு கொண்டுவரும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
தமிழக கோயில்களில் இருந்து திருடப்பட்ட விலைமதிக்க முடியாத பழங்கால சிலைகள் அமெரிக்கா உள்பட பல்வேறு வெளிநாடுகளுக்கு அடுத்தடுத்து கடத்திச் செல்லப்பட்டது. கோடிக்கணக்கான பணத்துக்கு அதைவிற்று பணம் சம்பாதித்ததாக சிலைகடத்தல் மன்னன் சுபாஷ் கபூர்வெளிநாட்டில் கைது செய்யப்பட்டு தமிழக போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். பின்னர், அவர் சிறையிலடைக்கப்பட்டார்.
அவரால் கடத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்ட சிலைகள் உள்பட ஏராளமான சிலைகள் தற்போது வெளிநாடுகளில் இருந்து மீட்கப்பட்டு தமிழகத்துக்கு கொண்டு வரப்பட்டு திருடப்பட்ட இடத்திலேயே நிறுவப்பட்டு வருகிறது.
ரூ.5.2 கோடிக்கு விற்பனை: இந்நிலையில், சுபாஷ்கபூரால் தமிழக கோயில் ஒன்றிலிருந்து கடத்திச் செல்லப்பட்ட பிற்காலச் சோழர் காலத்தைச் சேர்ந்த கலிய கல்கி என்ற கலிய மர்த்தன கிருஷ்ணர் (பாம்பின் மேல் நடனமாடும் கிருஷ்ணர்) உலோகச் சிலை ஒன்று தற்போது அமெரிக்காவில் உள்ள கலைக்கூடம் ஒன்றில் இருப்பதை தமிழக சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீஸார் கண்டறிந்துள்ளனர்.
» 205 மீனவர் குடும்பத்துக்கு காப்பீடு: ரூ.4.10 கோடி ஒதுக்கீடு
» ODI WC 2023 | இந்தியா - பாகிஸ்தான் ஆட்டத்துக்கான டிக்கெட் விலை ரூ.57 லட்சமா? - ரசிகர்கள் அதிருப்தி
இந்த சிலை காளிங்கன் என்ற 5 தலை பாம்பின் மேல் கிருஷ்ணர் நடனமாடுவதைப்போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. கடந்த 2005-ம்ஆண்டு சிலை கடத்தல் மன்னன்சுபாஷ் கபூரால் கடத்தி செல்லப்பட்டு, ரூ.5.2 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதும் அம்பலமாகி உள்ளது.சோழர்காலமான 11 - 12ம் நூற்றாண்டை சேர்ந்த இந்த சிலையை போலி ஆவணங்கள் மூலம் அமெரிக்காவுக்கு சட்டவிரோதமாக கடத்திச் சென்றுள்ளனர்.
இந்த சிலை தமிழ்நாட்டில் உள்ள எந்த கோயிலில் திருடப்பட்டது என்பதை கண்டுபிடிக்கும்படி சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் டிஜிபிசைலேஷ்குமார் யாதவ், ஐஜிதினகரன் ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர். அதன்படி, ஆய்வாளர் காவேரியம்மாள் விசாரணை மேற்கொண்டுள்ளார். விலை மதிப்புமிக்க இந்த நடனமாடும் கிருஷ்ணர் சிலையை அமெரிக்காவில் இருந்து தமிழ்நாட்டுக்கு மீட்டுக்கொண்டுவர உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் தெரிவித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
5 hours ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago