சென்னை | ஏடிஎம்-ல் பணம் நிரப்பும் நிறுவன காவலாளி மீது துப்பாக்கி குண்டு பாய்ந்து காயம்

By செய்திப்பிரிவு

சென்னை: ஏடிஎம் இயந்திரத்தில் பணம் நிரப்பும் தனியார் நிறுவனத்தின் காவலாளி மீது துப்பாக்கி குண்டு பாய்ந்த சம்பவம் சென்னையில் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது. நாடு முழுவதிலும் உள்ள பொதுத் துறை மற்றும் தனியார் வங்கிகளில் உள்ள ஏடிஎம் இயந்திரங்களில் பணம் நிரப்பும் பணியை தனியார் நிறுவனங்கள் செய்து வருகின்றன. துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்களுடன், பிரத்யேக வாகனங்களில் கோடிக்கணக்கான பணத்தை ஊழியர்கள் எடுத்துச் சென்று ஏடிஎம் இயந்திரங்களில் நிரப்புகின்றனர்.

இதுபோன்ற ஒரு நிறுவனம் சென்னை சேத்துப்பட்டு, ஹாரிங்டன் சாலையில் செயல்படுகிறது. இந்த நிறுவனத்தில் இருந்து நேற்று காலை துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டது. அப்போது, அந்த நிறுவன காவலாளி பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த ராணா குமார் (30) என்பவரது உடலில் குண்டு பாய்ந்து ரத்தம் பீறிட்டது.

இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதிர்ச்சி அடைந்த சக ஊழியர்கள் அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அறுவை சிகிச்சை மூலம் உடலில் பாய்ந்த குண்டு வெளியே எடுக்கப்பட்டது.

தகவல் அறிந்து சேத்துப்பட்டு போலீஸார் சம்பவ இடம் விரைந்து விசாரணை நடத்தினர். அப்போதுதான், அங்கு துப்பாக்கிச் சூடு நடைபெறவில்லை என்பதும், காயம் அடைந்த ராணாசிங் வைத்திருந்த துப்பாக்கியை (உரிமம் பெற்றது) வழக்கம்போல சுத்தம் செய்தபோது, தற்செயலாக துப்பாக்கி சுடும் பகுதியில் விரல்பட்டு குண்டு வெடித்து, ராணா குமாரின் வலது பக்க இடுப்பில் பாய்ந்ததும் தெரியவந்தது. இந்த விவகாரம் தொடர்பாக சேத்துப்பட்டு போலீஸார் வழக்குப் பதிந்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

10 hours ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

6 days ago

க்ரைம்

7 days ago

க்ரைம்

8 days ago

மேலும்