புதுச்சேரி: புதுவை மாநில பாஜக தலைவராக இருப்பவர் சாமிநாதன். இவரது கைபேசியில் உள்ள வாட்ஸ் அப்புக்கு கடந்த ஜூன் 11-ம் தேதி பெண் படத்துடன் தகவல் வந்துள்ளது.
அறிமுகம் இல்லாத எண் என்பதால் அதற்கு சாமி நாதன் பதிலளிக்கவில்லை. அதையடுத்து தொடர்ந்து அவருக்கு வாட்ஸ் அப்பில் தகவல் வந்தது. சில நாட்களுக்கு முன்பு அறிமுகமில்லாத அதே எண்ணிலிருந்து பெண் ஒருவரின் ஆபாச படத்துடன் வீடியோ அழைப்பு வந்தது. உடனே அந்த இணைப்பை சாமிநாதன் துண்டித்தார்.
அதன்பின் மார்பிங் செய்யப்பட்ட படங்கள் வாட்ஸ் அப்பில் அனுப்பி வைக்கப்பட்டன. அதன் பின்னர் வேறொரு செல்போனில் பேசிய மர்ம நபர் ரூ.50 ஆயிரம் தர வேண்டும், இல்லாவிடில் வீடியோ அழைப்புக் காட்சியை சமூக வலைதளத்தில் பதிவிடுவதாக மிரட்டினார். இதையடுத்து பாஜக தலைவர் சாமிநாதன் உடனடியாக குற்றத் தடுப்புப் பிரிவில் புகார் அளித்தார்.
போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். இது பற்றி போலீஸாரிடம் கேட்டதற்கு, “முதல் கட்ட விசாரணையில் ராஜஸ்தான் பகுதியிலிருந்து ஆண், பெண் ஆகியோர் கைபேசியில் பாஜக தலைவரை தொடர்பு கொண்டிருப்பது தெரியவந்தது. அவர்களை விரைவில் கைது செய்வோம்” என குறிப்பிட்டனர்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
7 days ago
க்ரைம்
8 days ago
க்ரைம்
8 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
12 days ago
க்ரைம்
12 days ago
க்ரைம்
13 days ago
க்ரைம்
14 days ago
க்ரைம்
14 days ago