மதுரை: கடந்த 2010-ம் ஆண்டில் மதுரை கீரைத்துறை காவல் நிலையம் மீது தாக்குதல் நடத்திய வழக்கில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் 9 பேருக்கு தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
மதுரை கீரைத்துறை போலீஸார் 2010-ல் ஒரு வழக்கு விசாரணைக்காக விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் மோகனா, லிங்கேஸ்வரி, சுமதி ஆகியோரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.
இதைக் கண்டித்து அப்போது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளராக இருந்த பாண்டியம்மாள் தலைமையில் கட்சியினர் காவல் நிலையத்துக்குள் புகுந்து 3 பேரையும் வெளியே விடுமாறு போராட்டம் நடத்தினர். அப்போது காவல் நிலைய பெயர் பலகை உடைக்கப்பட்டது.
இதுதொடர்பாக பாண்டியம்மாள், முத்து, பாஸ்கரன், அய்யன்காளை, மணிகண்டன், மீனாட்சி, உஷா ராணி, பாக்கியம், சுப்பிரமணி, மோகனா, லிங்கேஸ்வரி, சுமதி உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
இவ்வழக்கை விசாரித்த மதுரை 4-வது நீதித்துறை நடுவர் பாக்கியராஜ், பாண்டியம்மாள் உட்பட 9 பேருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை, தலா ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்தும் மோகனா, லிங்கேஸ்வரி, சுமதி ஆகியோரை விடுதலை செய்தும் உத்தரவிட்டார்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
6 hours ago
க்ரைம்
11 hours ago
க்ரைம்
11 hours ago
க்ரைம்
21 hours ago
க்ரைம்
23 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
5 days ago