மதுரை: மதுரை மாவட்டம் பேரையூர் அருகே வனப்பகுதியில் காட்டு விலங்குகளை வேட்டையாட முயன்ற 2 இளைஞர்கள் மின்சார வேலியில் சிக்கி உயிரிழந்தனர். மேலும், ஒருவர் படுகாயம் அடைந்தார்.
மதுரை மாவட்டம், பேரையூர் அருகிலுள்ள இடையபட்டியைச் சேர்ந்தவர் நாகராஜ். இவரது மகன் கருப்புச்சாமி (21). அழப்பாலச்சேரியைச் சேர்ந்த சிவராமன் மகன் அனுமந்தராஜ் (17), அதே ஊரைச் சேர்ந்த மணி மகன் என்பவர் மகன் மனோஜ் (29). இவர்கள் கடந்த 23-ம் தேதி இரவில் இடையபட்டி வனப்பகுதிக்கு சட்டவிரோதமாக காட்டு விலங்குகளை வேட்டையாடுவதற்காக சென்றனர்.
அப்போது, ஏற்கெனவே அதே காட்டு பகுதிக்குள் சட்டவிரோதமாக காட்டுப் பன்றிகளை வேட்டையாடுவதற்கென அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் கருப்புச்சாமி உட்பட 3 பேர் சிக்கினர். மின் வேலி தீபிடித்து எரிந்ததில் கருப்புச்சாமி, அனுமந்தராஜ் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். மனோஜ் காயத்துடன் உயிர் தப்பினார். அவர் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்த இருவரின் உடல்களும் திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பிரசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டன. இச்சம்பவம் குறித்து நாகையாபுரம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர், மேலும் காட்டுக்குள் அனுமதியின்றி மின் வேலி அமைத்தவர்களை தேடி வருகின்றனர் .
» இ-வர்த்தகம் | பெரிய, சிறிய வர்த்தகர்கள் இடையே சமமான போட்டியை உறுதி செய்ய வேண்டும்: பிரதமர் மோடி
» ‘மாஸ்’ ஆக்ஷன் ஹீரோவாக விமல் - ‘துடிக்கும் கரங்கள்’ ட்ரெய்லர் எப்படி?
முக்கிய செய்திகள்
க்ரைம்
14 hours ago
க்ரைம்
19 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
7 days ago