சென்னை | காவலர் மீது தாக்குதல் நடத்திய திமுக பிரமுகர், 2 மகன்கள் மீது போலீஸார் வழக்கு

By செய்திப்பிரிவு

சென்னை: காவலர் மீது தாக்குதல் நடத்திய விவகாரத்தில் திமுக பிரமுகர் மற்றும் அவரது 2 மகன்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

சென்னை தலைமைச் செயலக காலனியில் குற்றப் பிரிவு காவலராக பணிபுரிந்து வருபவர்கார்த்திக். கடந்த 17-ம் தேதி கார்த்திக் தனதுஉறவினர் பிரவீன் என்பவருடன் தலைமை செயலக காலனி பகுதியில் நடந்த மாரியம்மன் கோயில் திருவிழாவின்போது, திரு.வி.க.நகர் திமுக தெற்கு பகுதி செயலாளர் சாமிக்கண்ணு வீட்டு முன்பு இருந்த தடுப்பை நகர்த்தி அந்த வழியாக செல்ல முயன்றார்.

அதை சாமிக்கண்ணு கண்டித்துள்ளார். இதில், இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரம் அடைந்த சாமிக்கண்ணு, அவரது மகன்கள் பாபு மற்றும்ஸ்டாலின் ஆகியோர் தந்தைக்கு ஆதரவாக தகராறில் ஈடுபட்டுள்ளனர். ஒரு கட்டத்தில் காவலரை தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

அதிர்ச்சி அடைந்த கார்த்திக், இதுகுறித்து தலைமைச் செயலக குடியிருப்பு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி, சாமிக்கண்ணு, அவரது 2 மகன்கள் மீது காயம் ஏற்படுத்துதல், சட்ட விரோதமாக தடுத்தல், ஆபாசமாக பேசுதல், கொலை மிரட்டல் ஆகிய 4 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

16 hours ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

8 days ago

க்ரைம்

9 days ago

க்ரைம்

9 days ago

க்ரைம்

10 days ago

க்ரைம்

11 days ago

க்ரைம்

11 days ago

க்ரைம்

12 days ago

க்ரைம்

12 days ago

மேலும்