காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சேக்குப்பேட்டை அருகே ஆடித்திருவிழா அம்மன் வீதியுலா கூட்டத்தில் கார் புகுந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார்.
காஞ்சிபுரம் மாநகராட்சி சேக்குப்பேட்டை கவரை தெருவில் ஜெய விநாயகர் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் கடந்த 18-ம் தேதி ஆடித் திருவிழா தொடங்கியது.
இந்நிலையில், விழாவின் 2-ம் நாளான நேற்று முன்தினம் இரவு மாட்டு வண்டியில் அம்மன் வீதியுலா நடைபெற்றது. பாவாஜி தெருவில் ஊர்வலம் சென்றுகொண்டிருந்தபோது, அதே பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவர் அதிவேகமாக ஓட்டி வந்த கார், அம்மன் வீதியுலாக் கூட்டத்தில் புகுந்த விபத்துக்குள்ளானது.
கார் மோதியதில் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். எனினும், சிகிச்சை பலனின்றி வெங்கடேசன் என்பவர் உயிரிழந்தார். மற்றவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக விஷ்ணு காஞ்சி போலீஸார் வழக்கு பதிவு செய்து, சரவணனைக் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
9 days ago
க்ரைம்
10 days ago
க்ரைம்
10 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
12 days ago
க்ரைம்
12 days ago
க்ரைம்
12 days ago