கோவை அருகே திமுக கவுன்சிலர், கணவர், மகனுக்கு அரிவாள் வெட்டு: போலீஸார் விசாரணை

By டி.ஜி.ரகுபதி 


கோவை: கோவை அருகே திமுக கவுன்சிலர், அவரது கணவர், மகன் ஆகியோர் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

கோவை மலுமிச்சம்பட்டி அருகே உள்ள அவ்வை நகரைச் சேர்ந்தவர் ரவிக்குமார்(47). கார்பெண்டர் .அவரது மனைவி சித்ரா( 44 ). இவர் மலுமிச்சம்பட்டி கிராம ஊராட்சியின் மூன்றாவது வார்டு கவுன்சிலர். இவர்களது மகன் மோகன்(24). இவரும் கார்பெண்டராக இருக்கிறார். இவர்கள் மேற்கண்ட பகுதியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகின்றனர் .

இந்நிலையில், நேற்று இரவு 11 மணி அளவில் இவர்கள் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்துள்ளனர். அப்போது திடீரென வீட்டுக்குள் 5 மர்மநபர்கள் நுழைந்தனர் . அவர்கள் தகாத வார்த்தைகளால் பேசி அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் கவுன்சிலர் சித்ரா, அவரது கணவர் ரவிக்குமார், மகன் மோகன் ஆகியோரை சரமாரியாக வெட்டியுள்ளனர். பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது .

இவர்களது அலறல் சத்தம் கேட்டுவந்த அக்கம் பக்கத்தினர் மூவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து செட்டிபாளையம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

போலீஸாரின் முதல் கட்ட விசாரணையின்படி இடம் வாங்கல் விவகாரம் தொடர்பாக கவுன்சிலருக்கும் இடைத்தரகர் ஒருவருக்கும் இடையே மோதல் இருந்து வந்ததாகவும், அதன் காரணமாக இந்த அரிவாள் வெட்டு சம்பவம் நடந்து இருக்கலாம் என சந்தேகிப்பதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

7 hours ago

க்ரைம்

13 hours ago

க்ரைம்

20 hours ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

மேலும்