சென்னை | ஆட்டோ ஓட்டுநர் வீடு மீது பெட்ரோல் குண்டு வீச்சு: இளைஞர் கைது

By செய்திப்பிரிவு

சென்னை: முன்விரோதத்தில் ஆட்டோ ஓட்டுநர் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய இளைஞர் கைது செய்யப்பட்டார்.

சென்னை, பழைய வண்ணாரப்பேட்டை, இளைய தெருவை சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் கண்ணன் (52). நேற்று முன்தினம் இவர் வீட்டிலிருந்தபோது அங்கு வந்த இளைஞர் ஒருவர் பெட்ரோல் குண்டை கண்ணன் வீட்டின் மீது வீசினார். இதில், பால்கனி கதவின் மீது பெட்ரோல் குண்டு விழுந்து தீப்பற்றி எரிந்தது. இதுகுறித்து கண்ணன் தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

போலீஸார் நடத்திய விசாரணையில், பெட்ரோல் குண்டு வீசி தப்பி சென்றது தண்டையார்பேட்டை அப்பாசாமி 3-வது தெருவைச் சேர்ந்த குமார் என்ற சிவகுமார் (23) என்பது தெரிந்தது. இதையடுத்து தலைமறைவாக இருந்த அவரை போலீஸார் நேற்று கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட சிவகுமார், கடந்த வாரம் கண்ணன் வீட்டின் அருகில் சிறுநீர் கழித்துள்ளார். அப்போது, அங்கு வந்த கண்ணன் சிவகுமாரை எச்சரித்துள்ளார். இதனால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக சிவகுமார், கண்ணன் வீட்டில் பெட்ரோல் குண்டை வீசிச் சென்றது தெரியவந்ததாக போலீஸார் தெரிவித்தனர். இதற்கிடையில் கைது செய்யப்பட்ட சிவகுமார் நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

23 hours ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

6 days ago

க்ரைம்

9 days ago

க்ரைம்

10 days ago

க்ரைம்

10 days ago

க்ரைம்

11 days ago

க்ரைம்

11 days ago

க்ரைம்

11 days ago

க்ரைம்

12 days ago

க்ரைம்

12 days ago

மேலும்