கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 3 பேருக்கு ஆயுள் முழுவதும் சிறை

By செய்திப்பிரிவு

கடலூர்: கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே உள்ள ஊத்தங்கால் பகுதியைச் சேர்ந்தவர் விஜய்(27). இவர், அதே பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருடன் பழகி வந்துள்ளார். கடந்த 02.01.2019 அன்று அந்த இளம்பெண்ணை விஜய் ஒரு மோட்டார் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு, அங்குள்ள ஒரு ஏரிக்கரைக்கு அழைத்துச் சென்று, பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த 3 பேர் குடிபோதையில் அந்த இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட இளம்பெண் தனது பெற்றோரிடம் நடந்ததை கூறியுள்ளார். அந்த இளம்பெண்ணின் பெற்றோர் நெய்வேலி தெர்மல் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தனர்.

போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரணை செய்து, அந்த பகுதியில் பதிவாகி இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில் கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட விஜய்(27), வடக்கு மேலூரைசேர்ந்த முரளி(19), பிரபுராஜ்(27), வேல்முருகன்(25) ஆகிய 4 பேரை கைது செய்து, கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு கடலூர் வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த நிலையில் நேற்று இந்த வழக்கில் நீதிபதி உத்தமராஜா தீர்ப்பு கூறினார். இதில், குற்றவாளிகள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால், விஜய், வேல்முருகன், பிரபுராஜ் ஆகிய 3 பேரும் தங்களது வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும். மேலும், தலா ரூ.1 லட்சம் அபராதமும் கட்ட வேண்டும் என தீர்ப்பு கூறினார்.

ரூ.3 லட்சத்தை பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இழப்பீடாக வழங்கவும் உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் வனராசு ஆஜரானார். வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்தபோது ஜாமீனில் வெளி வந்திருந்த முரளி, அவரது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

9 hours ago

க்ரைம்

18 hours ago

க்ரைம்

22 hours ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

4 days ago

மேலும்