கிருஷ்ணகிரி பட்டாசு கிடங்கு வெடி விபத்து - சிலிண்டர் விற்பனை முகவர்களிடம் போலீஸார் விசாரணை

By செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி பட்டாசு கிடங்கு வெடி விபத்து தொடர்பாக, சிலிண்டர் முகவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். கிருஷ்ணகிரி பழையபேட்டை நேதாஜி சாலையில் கடந்த 29-ம் தேதி, ரவி என்பவரின் பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட வெடி விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். இந்த வெடி விபத்து தொடர்பாக கிருஷ்ணகிரியில் உள்ள சிலிண்டர் விற்பனை செய்யும் முகவர்களிடம், போலீஸார் விசாரணை நடத்தினர்.

அப்போது வெடி விபத்தின் போது ஓட்டலில் இருந்து மீட்கப்பட்ட பொருட்கள், சிலிண்டர் உள்ளிட்டவை காட்சிப்படுத்தினர். ஓட்டலுக்கு சிலிண்டர்கள் விநியோகம் செய்யப்பட்டதா என கேட்டனர். இதற்கு, தாங்கள் அப்பகுதியில் உள்ள முகவரிக்கு சிலிண்டர் விநியோகம் செய்யவில்லை. சிலிண்டர் வெடிப்பதற்கான வாய்ப்புகள் இல்லை என தெரிவித்தனர்.

விசாரணை கண்ணோட்டம்: இதுதொடர்பாக சிலிண்டர் விற்பனை முகவர்கள் கூறும்போது, சிலிண்டர் வெடித்ததால் இந்த விபத்து நடந்ததாக கூறுவது தவறு. அவ்விடத்தில் சிலிண்டர் வெடித்ததற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை. சிலிண்டர் வெடித்து சிதறிய பாகங்கள் எதுவும் அங்கு இல்லை.

பொதுவாக கியாஸ் கசிவு ஏற்பட்டால் அந்த அறை முழுவதும் கியாஸ் பரவி இருக்கும். அதன் பிறகு மின்சார சுவிட்ச் ஆன் செய்தாலோ, அடுப்பை பற்ற வைத்தாலோ தான் விபத்து ஏற்படும். இது போன்ற விபத்துகளிலும் அந்த குறிப்பிட்ட இடத்திற்குள் தான் நடைபெறுமே தவிர, பக்கத்து கட்டிடங்கள் தரைமட்டம் ஆகாது. மேலும் அப்போது கூட சிலிண்டர்கள் வெடிக்காது.

மனித உடல்கள் பல அடி தூரத்திற்கு சிதறிச் செல்லாது. எனவே சிலிண்டர் வெடித்ததால் இந்த விபத்து நடந்தது எனக் கூறுவது தவறு. இது தொடர்பாக நாங்கள் போலீஸாரிடம் தெளிவாக கூறி விட்டோம். போலீஸார் விசாரணை கண்ணோட்டத்தையும் மாற்ற வேண்டும், என்றனர்.

300 அடி தொலைவில் கிடந்த குழாய்: இந்த வெடி விபத்தில் பட்டாசு கிடங்கின் எதிர்புறம் 300 அடி தூரத்தில் நேற்று இரும்பு குழாய் ஒன்று கிடந்தது. இது பட்டாசு தயாரிக்கும் போது காலி பெட்டியில் மண் உள்ளிட்ட கலவைகள் அடைத்து நிரப்பி, அடிக்க பயன்படுத்தப்படும் (தூக்கு மணி) இரும்பு குழாய் என பட்டாசு தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்தனர். இதனை மீட்டு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிலிண்டர் வெடித்தது எனக் கூறுவது உண்மை அல்ல’ - ஓட்டல் உரிமையாளர் குடும்பத்தினர் ஆட்சியரிடம் புகார்: கிருஷ்ணகிரியில் பட்டாசு கிடங்கு வெடி விபத்து, சிலிண்டர் வெடித்ததால் ஏற்பட்டது எனக் கூறுவது உண்மைக்கு புறம்பானது என ஓட்டல் உரிமையாளர் குடும்பத்தினர் மற்றும் சிலிண்டர் விற்பனை முகவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த வெடி விபத்தில் உயிரிழந்த ஓட்டல் உரிமையாளர் ராஜேஸ்வரியின் கணவர் மற்றும் குடும்பத்தினர் ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர். அதில், எனது மனைவி ராஜேஸ்வரி, அதே பகுதியில் மரியபாக்கியம் என்பவருக்கு சொந்தமான கடையில் ஓட்டல் நடத்தி வந்தார். கடந்த 29-ம் தேதி பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட வெடி விபத்தின் போது ஓட்டல் தரைமட்டமானது. இதில் எனது மனைவியும் உயிரிழந்துவிட்டார்.

இந்நிலையில் கடை உரிமையாளரின் மகள் அந்தோணி ஆரோக்கியராஜ், காவல் நிலையத்தில் அளித்த புகாரில், எங்கள் கடையில் இருந்த சிலிண்டர் வெடித்து தான் பட்டாசு கடை மற்றும் அனைத்து கடைகளும் இடிந்து விட்டதாக கூறுவது, உண்மைக்கு புறம்பானது. ஓட்டலில் இருந்த 2 சிலிண்டர்களும் முழுமையாக மீட்கப்பட்டுள்ளன. பட்டாசு கடைக்கும், ஓட்டலுக்கும் இடையே 50 அடி தூரம் உள்ளது. எனவே, பொய் புகார் அளித்த அந்தோணி ஆரோக்கியராஜ் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். விபத்திற்கான உண்மையான காரணம் தெரிவிக்க வேண்டும், என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட பாஜக பொதுச் செயலாளர் கோவிந்தராஜ் மற்றும் கட்சியினர் எஸ்பி சரோஜ்குமார் தாகூரிடம் அளித்துள்ள மனுவில், கிருஷ்ணகிரி பட்டாசு வெடி விபத்தின் உண்மை தன்மை என்ன என்பதை சரியான விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

13 hours ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

6 days ago

க்ரைம்

7 days ago

க்ரைம்

7 days ago

க்ரைம்

10 days ago

க்ரைம்

11 days ago

க்ரைம்

11 days ago

க்ரைம்

12 days ago

க்ரைம்

13 days ago

க்ரைம்

13 days ago

மேலும்