சென்னை | போதையில் காவல் நிலையத்தில் ரகளை செய்தவர் கைது: வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறியதால் பரபரப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: மது போதையில் காவல் நிலையம் வந்து ரகளையில் ஈடுபட்ட ரவுடியால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர்.

சென்னை சிந்தாதிரிப்பேட்டையைச் சேர்ந்தவர் தர்கா மோகன் (61). இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. இவர் நேற்று முன்தினம் இரவு மது போதையில் சிறிய கைப் பையுடன் சிந்தாரிப்பேட்டை காவல் நிலையத்துக்கு வந்துள்ளார்.

வந்தவர் காவல் நிலைய பாதுகாப்பு (பாரா) பணியிலிருந்த பெண்தலைமைக் காவலரிடம், தான் சிந்தாதிரிப்பேட்டையில் மிகப்பெரிய ரவுடி என்றும், தன்னை தெரியாத ஆட்கள் யாருமில்லை என்றும், முடிந்தால் தன்னை கை, கால்களை உடைத்து சிறைக்கு அனுப்புங்கள் என்றும், பையில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும் மிரட்டிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.

மருத்துவமனையில் அனுமதி: இதுகுறித்து, அப்பெண் காவலர் அளித்த புகாரின்பேரில் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். 3 மணி நேர தேடுதலுக்குப் பிறகு தர்கா மோகன் கைது செய்யப்பட்டார். அவர் மீது மிரட்டல், அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல், ஆபாசமாகப் பேசுதல் உட்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், தனக்கு நெஞ்சு வலிப்பதாகக் கூறியதையடுத்து, தர்கா மோகன் ஸ்டான்லி (கைதிகள் வார்டு) அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

13 hours ago

க்ரைம்

15 hours ago

க்ரைம்

15 hours ago

க்ரைம்

18 hours ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

4 days ago

மேலும்