சென்னை: கோவை கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கில் மேலும் ஒருவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை வரும் 16-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
கோவை உக்கடத்தை அடு்த்த, கோட்டைமேடு சங்கமேஸ்வரர் கோயில் அருகே, கடந்தாண்டு அக்டோபர் மாதம் 23-ம் தேதி கார் வெடிப்புச் சம்பவம் நடந்தது.
இதில் காரை ஓட்டி வந்த ஜமேஷா முபின் உயிரிழந்தார். போலீஸாரின் விசாரணையில் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் ஆதரவாளரான முபின், மக்கள் கூடும் இடத்தில் தாக்குதல் நடத்த திட்டமிட்டது தெரியவந்தது.
பின்னர் இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) பிரிவுக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக முகமது தல்கா (25), முகமது அசாருதீன் (23), முகமது ரியாஸ் (27), பெரோஸ் இஸ்மாயில் (27), நவாஸ் இஸ்மாயில் (26), அப்சர்கான், முகமது தவுபீக் (25), உமர் பாரூக் (28), பெரோஸ்கான் (28), ஷேக் இதாயத்துல்லா, சனோபர் அலி ஆகிய 11 பேர் கைது செய்யப்பட்டனர்.
» நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஐஏஎஸ் அதிகாரிக்கு 2 வாரம் சிறை: உயர் நீதிமன்றம் உத்தரவு
» ஒகேனக்கல் ஆடிப்பெருக்கு விழாவில் கவனம் ஈர்த்த உண்ணிக் குச்சி யானைகள்
இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட 11 பேர் மீதும் என்.ஐ.ஏ அதிகாரிகள் குற்றப்பத்திரிகை மற்றும் துணை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை சென்னை பூந்தமல்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இவ்வழக்கில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் இவ்வழக்கு தொடர்பாக மேலும் ஒருவரான கோவை தெற்கு உக்கடம் ஜி.எம்.நகரைச் சேர்ந்த முகமது இத்ரீஸ் (25) என்பவரை என்.ஐ.ஏ அதிகாரிகள் நேற்று முன்தினம் கைது செய்தனர். இவர், உயிரிழந்த முபினின் நெருங்கிய நண்பராவார். இவர்களுக்கு இடையே, கடந்த மூன்றாண்டுகளாக நடந்த செல்போன் உரையாடலை ஆய்வு செய்த அதிகாரிகள், அதன் இறுதியில் முகமது இத்ரீசை கைது செய்தனர்.
நேற்று அவர் பூந்தமல்லி நீதிமன்றத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டார். பின்னர், அவர் நீதிபதி இளவழகன் முன்பு ஆஜர் படுத்தப்பட்டார். இதையடுத்து அவரை வரும் 16 -ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி இளவழகன் உத்தரவிட்டார். இதையடுத்து முகமது இத்ரீஸ் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
5 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
9 days ago
க்ரைம்
10 days ago
க்ரைம்
10 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
12 days ago
க்ரைம்
12 days ago
க்ரைம்
13 days ago