பாளை. மத்திய சிறையில் கைதி திடீர் மரணம்

By செய்திப்பிரிவு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் களக்காடு அருகே நடைபெற்ற இரட்டை கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

சேரன்காதேவி கோட்டை விளை தெருவை சேர்ந்த அப்பாதுரை மகன் பாலையா (54). தனது மனைவியின் சொந்த ஊரான களக்காடு அருகே கோதைசேரியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த 2014-ம் ஆண்டு தம்பதியரிடையே தகராறு ஏற்பட்டபோது உறவினர்கள் நம்பி (55), அவரது மகன் ரமேஷ் (24) ஆகியோர் தட்டிக்கேட்டுள்ளனர்.

அப்போது ஏற்பட்ட தகராறில் நம்பி, ரமேஷ் ஆகியோர் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். களக்காடு போலீஸார் வழக்கு பதிந்து பாலை யாவை கைது செய்தனர். இந்த வழக்கில் அவரு க்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து திருநெல்வேலி நீதிமன்றம் தீர்ப்பு கூறியது. இதையடுத்து பாளையங் கோட்டை மத்திய சிறையில் அவர் அடைக்கப் பட்டிருந்தார்.

இந்நிலையில் சிறையில் நேற்று அதிகாலையில் மயங்கி விழுந்த பாலையாவை சிறை காவலர்கள் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது தொடர்பாக பெருமாள்புரம் போலீஸார் விசாரிக்கின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

15 hours ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

6 days ago

க்ரைம்

7 days ago

க்ரைம்

7 days ago

க்ரைம்

10 days ago

க்ரைம்

11 days ago

க்ரைம்

11 days ago

க்ரைம்

12 days ago

க்ரைம்

13 days ago

க்ரைம்

13 days ago

மேலும்