சென்னை: சென்னை கே.கே.நகர் பகுதியைச் சேர்ந்த தொழிலாளி விஜயகுமார். இவர் மகளின் திருமணத்துக்கு நகை வாங்குவதற்காகக் கடந்த16-ம் தேதி மனைவியுடன் ரூ.2.50லட்சம் பணத்தை எடுத்துக் கொண்டு மாநகர அரசு பேருந்தில் (12ஜி) தி.நகருக்கு சென்றார்.
பேருந்திலிருந்து இறங்கிய இருவரும் பிரபல நகைக் கடையில் நகை வாங்கிவிட்டு பணத்தைச்செலுத்த பையைப் பார்த்தபோது அதிலிருந்த ரூ.2.50 லட்சம் மாயமாகி இருந்ததைக் கண்டு அதிர்ச்சிஅடைந்தனர். பேருந்தில் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி மர்ம நபர்கள் பணத்தை திருடி இருப்பது தெரிந்தது.
இதுகுறித்து மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து கண்காணிப்பு கேமராக்களில் பதிவானகாட்சிகளை அடிப்படையாக வைத்து விசாரணை நடத்தப்பட்டது. இதில், விஜயகுமார் தம்பதியிடம் திருடியது, பரமக்குடியை சேர்ந்த உறவினர்களான கவிதா மற்றும் ரேகா என்பது தெரிந்தது.
மயிலாடுதுறையிலிருந்த அவர்கள் 2 பேரையும் தனிப்படை போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்தனர். இருவரும் சேர்ந்துதமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் பேருந்தில் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி தனியாகப் பயணிப்பவர்கள், வயது முதிர்ந்தவர்களை குறி வைத்து பணம் மற்றும் நகைகளைத் திருடிவந்தது தெரியவந்தது.
» உலக பல்கலைக்கழக விளையாட்டு: இந்தியாவுக்கு 4-வது தங்கம்
» அரிசி ஏற்றுமதிக்கு இந்தியாவின் தடையும் சர்வதேச அரங்கில் அதன் தாக்கமும்..
அவர்கள் மீது ஏற்கெனவே பல்வேறு மாவட்ட காவல் நிலையங்களில் நகை பறிப்பு, திருட்டு வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. கடந்த 15-ம் தேதி கிண்டியில் இதேபோல் ஒரு பயணியிடம் ஓடும் பேருந்தில் நகை திருட்டில் தெரியவந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
11 hours ago
க்ரைம்
16 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
7 days ago