வண்டலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய பெண் ஆய்வாளர் கைது

By செய்திப்பிரிவு

மறைமலை நகர்: செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணிபுரிந்து வந்தவர் மகிதா அன்ன கிறிஸ்டி. இவரிடம் காட்டாங்கொளத்தூரை சேர்ந்த ஒரு பெண் தனது 17 வயது மகளை திரிசூலம் பகுதியை சேர்ந்த ரஞ்சித் என்பவர் ஆசை வார்த்தை கூறி சிறுமியை கர்ப்பமாக்கியதாக கடந்த ஜூலை 2-ம் தேதி புகார் அளித்துள்ளார்.

புகாரின் பேரில் போக்சோ வழக்குப் பதிவு செய்து ரஞ்சித்தை கைது செய்த போலீஸார் சிறையில் அடைத்தனர். அப்போது சிறுமியின் தாயாரிடம் விசாரித்த போது சிறுமிக்கு ஏற்கெனவே இரண்டு‌ முறை கருக்கலைப்பு செய்ததை கூறியுள்ளார்.

அதில் மறைமலை நகர் மற்றும் சிங்கபெருமாள் கோவில் மற்றும் மறைமலைநகர் பகுதியில் உள்ள இரண்டு தனியார் மருத்துவமனைகளில் கருக்கலைப்பு செய்ததாக சில சிறுமியின் தாய் தெரிவித்தார். அதனடிப்படையில் மகளிர் காவல் ஆய்வாளர் மகிதா, மறைமலை நகரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்று மருத்துவமனை உரிமையாளர் உமா மகேஸ்வரியிடம் விசாரணை நடத்தி உள்ளார்.

அதேபோல் சிங்கபெருமாள் கோவில் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் விசாரணை நடத்தியுள்ளார்.அப்போது சட்ட விரோதமாக 17-வயது சிறுமிக்கு கருக்கலைப்பு செய்ததற்கு வழக்குப்பதிவு செய்ய உள்ளதாக மகிதா கூறியதாக சொல்லப்படுகிறது. நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்காக பேரம் பேசி ரூ.10 லட்சம் பெற்றதாகவும் தொடர்ந்து மறைமலைநகர் மருத்துமவனை உரிமையாளர் உமா மகேஸ்வரியிடம் இருந்து 2-லட்சம் பெற்றதாகவும் தெரிகிறது.

இந்த விவகாரம் வெளியில் கசிந்து தாம்பரம் காவல் ஆணையரகத்துக்கு புகாராக சென்றுள்ளது. உடனடியாக தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் ஆய்வாளர் மகிதாவை அழைத்து விசாரணை செய்துள்ளார். அப்போது அவர் பணம் பெற்றது உறுதியானதால் அவரை சஸ்பெண்ட் செய்தும் வாங்கிய பணத்தை திருப்பி அளிக்கவும் ஆணையர் உத்தரவிட்டிருந்தார்.

மேலும் அரசு மருத்துவர் பராசக்தி மறைமலைநகர் காவல் நிலையத்தில் அளித்த புகாரில் தன்னை காவல் ஆய்வாளர் மகிதா மிரட்டி பணம் பறித்ததாக கூறியிருந்தார்.

இது தொடர்பாக மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மகிதா மீது பணம் பறித்தல், மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவரை தேடி வந்தனர். இந்நிலையில் தலைமறைவாக இருந்த அவரை பொன்னேரி அருகே போலீஸார் கைது செய்தனர். தொடர்ந்து அவரை மறைமலைநகர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை செய்து வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

2 hours ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

6 days ago

க்ரைம்

7 days ago

க்ரைம்

8 days ago

க்ரைம்

8 days ago

க்ரைம்

8 days ago

க்ரைம்

11 days ago

க்ரைம்

12 days ago

க்ரைம்

13 days ago

க்ரைம்

13 days ago

க்ரைம்

14 days ago

மேலும்