சென்னை: சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியில் 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபருக்கு 20 ஆண்டுகள் கடுங் காவல் சிறை தண்டனை விதித்து சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த ஆண்டு சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியில் 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 49 வயது மதிக்கத்தக்க நபரை கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை சென்னை மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி எம்.ராஜ லட்சுமி முன்பாக நடந்து வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றம்சாட்டப்பட்ட நபர் மீதான குற்றச்சாட்டு அரசு தரப்பால் சரி வர நிரூபிக்கப்பட்டுள்ளதால், அவருக்கு 20 ஆண்டுகள் கடுங் காவல் சிறை தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தும், அபராதத்தை செலுத்த தவறினால் மேலும் 3 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
53 mins ago
க்ரைம்
23 hours ago
க்ரைம்
23 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago